7 Daily Exercises To Stop Negative Thinking : நம்மில் பலர் நெகடிவாக யோசிக்கும் பழக்கம் கொண்டிருப்போம். இந்த நெகடிவ் திங்கிங்கை, எப்படி ஒழித்துக்கட்ட வேண்டும் தெரியுமா? இதோ சில குறிப்புகள்.
7 Daily Exercises To Stop Negative Thinking : மனிதனின் மூளை, சும்மா இருக்கும் சமயங்களில் எதையாவது ஒன்றை யோசித்துக்கொண்டே இருக்கும். இதனால், தேவையற்ற எண்ணங்கள் மனதை ஆட்கொள்வதோடு, நம்மை நிம்மதியாகவும் உறங்க விடாது. இப்படிப்பட்ட நெகடிவ் எண்ணங்களை யோசிக்காமல் இருக்க தினசரி நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை செய்தால், எண்ணங்கள் மேம்படுவதோடு வாழ்க்கையும் அழகாகும். அப்படி, நாம் தினமும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்ளும் முன்னர், உங்கள் வாழ்வில் இருக்கும் 3 நல்ல விஷயங்களை நினைத்து நன்றி கூறுங்கள். இது, உங்கள் நாளை பாசிடிவாக மாற்ற உதவும்.
தினமும் 5-10 நிமிடங்கள், உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை ஜர்னலில் எழுதுங்கள். இதை இரவில் செய்யலாம். இவை, அந்த நாளில் நடந்த எந்த நல்ல விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்களுக்குள் நீங்கள் எப்படி பேசிக்கொள்கிறீர்கள் என்பதும் மிகவும் முக்கியம். “எனக்கு மன உறுதி அதிகம், என்னால் இதனை கடந்து போக முடியும்” என உங்களுக்குள் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களை சற்று மாற்றி அமைக்க வேண்டும், “என்னால் இதை செய்ய முடியாது” என்பதற்கு பதிலாக, “எனக்கு இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், என்னால் இதை செய்ய முடியும்” என உங்களுக்குள் நீங்களே கூறுங்கள்.
உங்களுக்கு அதிகமான நெகடிவிட்டியை கொடுக்கும் விஷயங்களில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அது, ஒரு இடமாக இருந்தாலும், சமூக வலைதளமாக இருந்தாலும், அதிலிருந்து நீங்கள் தள்ளியே இருப்பது நல்லது.
தினமும், இது போன்ற எண்ணங்கள் அதிகமாக மேலோங்கும் போது அவற்றிடம் இருந்து ஒரு 5 நிமிடம் பிரேக் எடுங்கள். நீங்கள் செய்யும் வேலை என்னவோ, அதனை அப்படியே நிறுத்தி விட்டு பிரேக் எடுக்க செல்லலாம்.
அந்த நாள் முடிவடைகையில், அன்று சிறப்பாக அல்லது பாசிடிவாக நடந்த விஷயங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.