Old Pension Scheme Latest News: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக்கோரி அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
Old Pension Scheme Tamil Nadu: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் எங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும் என மூன்று அரசு ஆசிரியர்கள் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முக்கிய உத்தரவு.
ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் சார்பாக சென்னை ஹைகோர்ட் முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுக்குறித்து முழு விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் தொடர்பாக ஒரு தீர்வு கிடைக்காதா என பல ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் நியூ பென்ஷன் ஸ்கீம் கீழ் சேர்க்கப்பட்டனர். அதாவது அப்பொழுது அமல்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கான பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் நியூ பென்ஷன் ஸ்கீம் திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் என்பது 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு நியூ பென்ஷன் ஸ்கீம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் மீண்டும் அமல் செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட முக்கியக் காரணம் என்னவென்றால், நியூ பென்ஷன் ஸ்கீம் திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை கிடைக்கும் என சரியாக கணிப்பது கடினமாக உள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வு இருக்காது எனக் கூறப்பட்டு உள்ளது. ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நியூ பென்ஷன் ஸ்கீம் திட்டத்தின் கீழ் பென்ஷன் குறைவாக கிடைக்கும். இதுவே போராட்டத்துக்கு காரணமாக இருக்கிறது.
அப்போதைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தை ரத்து செய்யப்படுவதாக 2003 ஏப்ரல் 1 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட சிலர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் சில அரசு ஆசிரியர்கள் எங்களை ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தில் சேர்க்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அரசு ஆசிரியர்கள் தங்கள் மனுவில், "தற்போது எங்கள் பெயர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறது. ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தை 1-4-2003 அன்று முதல் ரத்து செய்வதாக, அதே ஆண்டு 6-8-2003 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 2003க்கு முன்னாடியே எங்களுக்கு எக்ஸாம் நோட்டிபிகேஷன் அனுப்பட்டு தேர்வு நடவடிக்கை தொடங்கி விட்டது. எங்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது. எனவே எங்கள் பெயரை ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட பிறகு, "இதுபோன்ற அரசு ஊழியர்களை ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் திட்டத்தில் பெயரை சேர்க்கவேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு வாரத்துக்குள் அரசு தகுந்த முடிவை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், "தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்பது இங்கே கவனிக்கத்தக்கது.