குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2023, 04:59 PM IST
  • குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் போக்குவரத்து செலவுகளும் குறையும்.
  • ராக்கெட்டுகளை விண்ணில் ஏக பூமத்திய ரேகை ஒரு முக்கியமான கணக்காகும்.
  • ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுப்பெற்று கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் title=

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட SSLV - D2 ராக்கெட் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இனி இந்த வகை ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் SSLV - D1 ராக்கெட் இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த சுற்று வட்டப்பாதையில் இது செயற்கைக்கோள்களை சரியாக நிலை நிறுத்தவில்லை என்பதால், அத்திட்டம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், மீண்டும், SSLV - D2 ராக்கெட்டில் மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் நேற்று ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தற்போது இரண்டாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கிறோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தற்போது SSLV ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

ராக்கெட்டுகளை விண்ணில் ஏக பூமத்திய ரேகை ஒரு முக்கியமான கணக்காகும். எந்த அளவிற்கு இந்த பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறோமோ அந்த அளவிற்கு திட்டம் எளிதில் வெற்றி பெறும். ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகையிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. ஆனால் குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. எனவே இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | காஷ்மீரில் கிடைத்த லிதியம் புதையல் இந்தியாவின் தலைவிதியை மாற்றுமா..!

மேலும், நெல்லை மாவட்டத்தின் மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்திலிருந்து தான் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் கொண்டு செல்லப்படும் நிலையில் அதன் உதிரிபாகங்களும் இங்கிருந்துதான் சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் போக்குவரத்து செலவுகளும் குறையும். ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுப்பெற்று கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்திலிருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியிருப்பது தமிழ்நாடு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News