மயங்கி விழும் தொண்டர்கள்... இடமில்லாமல் திணறும் திடல் - தவெக மாநாட்டில் நடப்பது என்ன?

TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 27, 2024, 11:55 AM IST
  • 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு
  • மாலை நடக்கும் மாநாட்டுக்கு அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்
  • மாநாட்டு அரங்கில் தொண்டர்கள் அமர இடமில்லை.
மயங்கி விழும் தொண்டர்கள்... இடமில்லாமல் திணறும் திடல் - தவெக மாநாட்டில் நடப்பது என்ன? title=

Tamilaga Vetri Kazhagam Conference Latest News Updates: விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கிறது. சுமார் 85 ஏக்கர் கொண்ட இந்த மைதானத்தில் தற்போது வரை 55 ஆயிரம் இருக்கைகளுக்கு உள்ளாகவே போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீதம் இருக்கக்கூடிய மைதானத்தின் உட்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டாலும் 80,000 இருக்கைகளுக்கு உள்ளாகவே போட முடியும் என கூறப்படுகிறது. 

தற்போதே 3 லட்சம் தொண்டர்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாலைக்குள் 10 லட்சம் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இருக்கைகள் என்பது போதுமானதாக இருக்காது என தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தலையில் சேரை கவிழ்க்கும் தொண்டர்கள்

தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களிலிருந்து நேற்றிரவே தொண்டர்கள் விக்கிரவாண்டி வந்தடைந்தார்கள். மேலும் காலையிலேயே தடுப்புகளை உடைத்து, தடைகளை தாண்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். கடும் வெயிலையும் பாராமல் இருக்கையை கைப்பற்ற தொண்டர்கள் முண்டியடித்தனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து முற்பகலில் கிளம்பி விக்கிரவாண்டிக்கு வரக்கூடிய தொண்டர்கள் எங்கு அமர வைக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் எங்கிருந்து மாநாட்டை பார்க்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. 

மேலும் படிக்க | 2005இல் விஜயகாந்த் செய்த பெரிய சம்பவம்... தேமுதிகவை மிஞ்சுமா விஜய்யின் தவெக மாநாடு?

மாநாட்டு மைதானத்தில் தனித்தனியாக பகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்குள் குறிப்பிட்ட அளவு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. தற்போது காலையில் வந்த தொண்டர்கள் முன் பகுதிக்கு சென்றுவிட்டனர். தொடர்ந்து உள்ளே செல்லக்கூடிய தொண்டர்கள் வெயிலின் காரணமாக பின்பகுதியில் இருந்து நாற்காலிகளை அவர்கள் தலைக்கு மேலே பிடித்துக் கொள்வதற்காக தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

இருக்கை இல்லாமல் அவதி

ஏற்கனவே காலியாக இருந்த பகுதிகளிலும்  கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த பகுதிகளிலும் நாற்காலிகளே போடும்படி காவல்துறை அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில்தான், அந்த பின்பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் முழுவதுமாக உள்ளே செல்லக்கூடிய தொண்டர்கள் எடுத்துச் சென்று இருப்பதால் பின்னால் வரக்கூடிய தொண்டர்களுக்கு தற்போது நாற்காலிகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக காலி இடத்தில் அதிகப்படியான தொண்டர்கள் குவியும் போது கூட்ட நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் காலையிலேயே உள்ளே சென்று அமர்ந்திருக்கக் கூடிய தொண்டர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக, அங்கு சில தவெக தொண்டர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த அவசர மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டுக்கு அதிகாலை முதலே இடம்பிடிக்க தொண்டர்கள் முண்டியடித்து வந்தனர். தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே பலமுறை தொண்டர்களுக்கு அறிவுரை கூறியும், அதை சற்றும் பின்பற்றாத தொண்டர்கள் விஜய்யை காணும் ஆர்வத்தில் முன்பக்கமாக முண்டியடித்து சென்றனர். 

மாநாட்டு திடல் ஏறத்தாழ நிரம்பிவிட்ட நிலையில், தற்போது உள்ளே வரும் தொண்டர்களுக்கு இருக்கை இல்லை. இன்னும் லட்சக்கணக்கில் கூட்டம் வந்தால் இருக்கை பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். இதுவே விஜய்க்கும் அக்கட்சிக்கும் பெரிய பிரச்னையை உண்டாக்கலாம். 

மேலும் படிக்க | கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News