தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர். எல்லா மதத்திற்கும் வாழ்த்து சொல்லும் போது தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.
உடனே குறுக்கிட்டு பேசிய சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, இது கொள்கை முடிவு எனவும் இது குறித்து நிர்ப்பந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார். உடனே குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பேசியதில் தவறு ஏதும் இல்லை எனவும், அனைவருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடிய முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதன்காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
மேலும் படிக்க | CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசே நடைபெற்று வருகிறது. திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்ற கருத்தை பரப்பும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் பேசி வருகிறார். திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது தந்தை பெரியார் ஆட்சி. கலைஞர் வழிநடத்தி வரும் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் அடிபணிந்து போக மாட்டோம் எனத் திட்டவட்டமாக தெரித்தார்
ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து பிரச்சனை வருவது முதன்முறை அல்ல. திராவிடக் கொள்கைகளை பின்பற்றி தீபாவளிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை. எனினும், முதலமைச்சரான பின்னும் ஸ்டாலின் தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என கடந்த தீபாவளி பண்டிகையின்போது விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது சட்டசபையிலும் எதிரொலித்துள்ளது.
மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR