சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் உயர்ரக கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அது போல் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடிப்பாக்கம் போலீஸ் மடக்கி பிடித்தனர்.
நேற்றைய முன்தினம் (14.05.2024) அதிகாலை சுமார் 4.15 மணியளவில் பல்லாவரம் - துரைப்பாக்கம் 200அடி ரேடியல் சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மடிப்பாக்கம் தலைமை காவலர் பெரிய கருப்புசாமி என்பவர் ரோந்து சென்ற போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை (TN 85 S 2740) நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆட்டோ ஓட்டி வந்தவர் அனகாபுத்தூரை சேர்ந்த முரளிகிருஷ்ணா (வயது 46) என்று கூறிய நிலையில் ஆட்டோவில் பின்புறம் அமர்ந்திருந்த நபரை கூப்பிட்டு விசாரித்ததில் அவர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் (வயது 29) என்பதும் பி.டெக் படித்து முடித்துவிட்டு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் (ஐடி நிறுவனத்தில்) பணிபுரிந்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் ஶ்ரீனிவாச ராகுல் குறித்து விவரங்களை கேட்டபோது சிறிது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் ஐடி ஊழியர் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் சூட்கேஸை சோதனை செய்துள்ளார். சூட்கேஸ் மற்றும் லேப்டாப் பேக்கை திறந்து பார்த்ததும் உள்ளே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்ததை கண்டு போலீசார் சிறிது அதிர்ச்சியடைந்தார். மேலும் ஐடி ஊழியர் கையில் வைத்திருந்த பை மற்றும் சூட்கேசில் இருந்தது உயர் ரக கஞ்சா என்பது தெரியவந்ததை தொடர்ந்து அதன் எடை 6 கிலோ என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!
அதை தொடர்ந்து தலைமை காவலர் பெரிய கருப்பசாமி இதுகுறித்து உடனடியாக மடிப்பாக்கம் போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காவலர் பெரிய கருப்பசாமி பிடித்து வைத்திருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஸ்ரீனிவாச ராகுல் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் டிப்டாப் உடை அணிந்து கையில் எது வைத்திருந்தாலும் போலீசார் அது என்னவென்று கேட்பதில்லை. ஆகையால் போலீசார் கையில் பிடிபடாமல் இருக்க இந்த வழியை கையில் எடுத்து வெளி மாநிலம் சென்று அங்கிருந்து கஞ்சா குறைந்த விலைக்கு வாங்கி வந்து சென்னையில் அதை பல மடங்கு விலை உயர்த்தி அமோகமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் ஶ்ரீனிவாச ராகுல் வைத்திருந்த கஞ்சா உயர் ரக கஞ்சா என்றும், சாதாரண கஞ்சாவை விட இதன் மதிப்பு பல மடங்கு அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள OG உயர் ரக கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற ஐடி ஊழியர் கைதான சம்பவம் ஐடி ஊழியர்கள் மத்தியில் சிறிது முகசுழிப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ