நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பட்ஜெட் தாக்கலின் போது ஹிந்தியில் உரையாற்றினார்.
இந்த பட்ஜெட் உரை குறித்து வைகோ உள்ளிட பல அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
>மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்.
>மற்ற மாநிலங்களுக்காகவே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் உரையாற்றினார்
>நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் உரையாற்றியதை அரசியலாக்க வேண்டாம் என்றார்.
>தமிழ் பற்றாளர்களில் பாஜக தலைவர்கள் வைகோவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்றார்.
மேலும் அவர், வைகோவுக்கு தற்போது தமிழ் உணர்வு இல்லை என்பதால் தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.