ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் கேலிகூத்தாக மாறியிருப்பதை திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் மூலம் தெரிகிறது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவின் காரணமாக காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பின்னர் கஜா சீரமைப்பு பணிகளை காரணமா காட்டி இடைத்தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு அமமுக கட்சி பொதுச்செயலளார் டிடிவி தினகரனை தவிர மற்ற கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் திருவாரூர் தேர்தல் குறித்து தெரிவிக்கையில்...
திருவாரூர் தேர்தல் ரத்து!
கஜாபுயல் பாதிப்பு உலகிற்கே தெரிந்த ஒன்று.இந்நிலையை அறியாமல் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்ததை, மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். ஜனநாயக நாட்டில் தேர்தல், கேலிகூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் pic.twitter.com/ZRR6i6N4hR— Vijayakant (@iVijayakant) January 7, 2019
திருவாரூர் தேர்தல் ரத்து!
கஜாபுயல் பாதிப்பு உலகிற்கே தெரிந்த ஒன்று.இந்நிலையை அறியாமல் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்ததை, மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். ஜனநாயக நாட்டில் தேர்தல், கேலிகூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம், என குறிப்பிட்டுள்ளார்.
அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது !#winter pic.twitter.com/QjuTqGWC8d
— Vijayakant (@iVijayakant) January 7, 2019
தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் அவர்களது உடல் நிலை குறித்து அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றது. இந்த வதந்திகளை தடுக்கும் விதமாக அவ்வப்போது அவரது மனைவி விஜயகாந்த் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் விஜயகாந்த் திரையரங்கத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதேப்போல் தற்போது விஜயகாந்த் அமெரிக்க குளிரை மகிழும் விதமாக மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.