கலைஞர் கருணாநிதி உடலுக்கு, ராகுல்காந்தி நேரில் அஞ்சலி!

மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்!

Last Updated : Aug 8, 2018, 02:32 PM IST
கலைஞர் கருணாநிதி உடலுக்கு, ராகுல்காந்தி நேரில் அஞ்சலி! title=

மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த கலைஞர் அவர்கள் இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக போற்றப்படுகின்றார். 

இந்நிலையில் தற்போது சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Trending News