குரோம்பேட்டைியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் ஒரு பெண் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டார் .
பண மோசடி:
சென்னை குரோம்பேட்டையில் உள்ள நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் மலர். 43 வயதாகும் இவர் ஷூ கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன், குணசுந்தரி என்பவரும் பணிபுரிந்துள்ளார்.
குணசுந்தரியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர் தன்னுடைய மகள் சுகன்யா அரசியல் பிரமுகர்களிடம் செல்வாக்காக உள்ளதாக கூறி நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த பெண், அரசு வேலை கிடைத்து விடும் என நம்பி 5 லட்சம் ரூபாயை பல தவணைகளாக சுகன்யாவிடம் கொடுத்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்:
பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை, இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மலர் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் குரோம்பேட்டை காவல் துறையினர் “நம்ப வைத்து மோசடி செய்தல்” பாேன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடி பெண் சுகன்யாவை கைது செய்தனர்.
பல லட்சம் மோசடி..!
விசாரணையில் அப்பெண் பல பேரிடம் தான் ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் உதவியாளராக இருப்பதாகவும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | இறங்கு முகத்தில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.30 குறைந்தது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ