ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடந்த பண மோசடி குறித்த விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது:- இந்த ஒப்பந்தம் தொடர்பான நிதி ஆவணங்கள் மற்றும் மற்ற ஆவணங்களை, நேரிலோ அல்லது பிரதிநிதிகள் மூலமாகவோ இந்த வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல்முறையாகும். இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரியும் அமலாக்கத்துறை துணை அதிகாரியுமான ராஜேஸ்வர் சிங் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளதாக அதிகாரி கூறினார்.
இந்த சம்மனுக்கு பதிலளிக்க கார்த்தி சிதம்பரம் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.