அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விருப்பமா? இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க

Agniveer Recruitment | அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2025, 09:51 AM IST
  • இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?
  • அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது
  • தகுதியான இளைஞர்கள் வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விருப்பமா? இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க title=

Agniveer Recruitment 2025 Tamil Nadu | இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு அக்னி வீர் திட்டம் வழியாக இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம். அதற்கான அறிவிப்புகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்காக வெளியிடப்படுள்ள அறிவிப்பில், இந்திய இராணுவத்தில் அக்னிவீர்திட்டத்தின் கீழ் Agniveer (Men), Sepoy (Pharma) and Soldier Nursing Assistant / Nursing Assistant Veterinary lu பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பதற்கான முகாம் காஞ்சிபுரத்தில் (காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ளபேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 05.02.2025 முதல் 15.02.2025 வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் அக்னிவீர் திட்டத்தின் கீழ்நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு இராணுவத்தில் சேர்வதற்கு உடற்தகுதி தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதே சமயம் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதும் ஆள்சேர்ப்பு செயல்முறைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். 

விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பினில் முகாம் தொடர்பாக உள்ள ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சரிவர கடைப்பிடிக்காத காரணத்தினால், முகாம்களில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் உள்ள Agniveer Recruitment Rally (Men), Sepoy (Pharma) and Soldier Nursing Assistant / Nursing Assistant Veterinary ஆகிய பணிகளுக்கான சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை என்னென்னவென்று முறையாக அறிந்து கொள்ளவும். 

அதற்கு ஏற்றார் போல் வரும் 05.02.2025 முதல் 15.02.2025 வரை காஞ்சிபுரத்தில் (காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ளபேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு நடைபெறவுள்ள ஆட்சேர்ப்பு முகாமின் போது சமர்ப்பிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

அக்னிவீர் திட்டம் என்றால் என்ன?

ராணுவத்தில் ஆட்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதேபோல் இவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 

4 வருடங்கள் முடிந்த பின்னர் இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சேர்க்கப்படுபவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மீதம் உள்ள 75 சதவிகித அக்னி வீர் வீரர்கள் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிற மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்து பணி பெற முடியும்.

மேலும் படிக்க | அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தேதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்..! இந்த ஆவணம் இணைக்க தேவையில்லை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News