நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது. இதில் அவர் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தினத்தன்று வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி; டெல்லியில் காவல்துறைக் கண்காணிப்பு தீவிரம்
இது பற்றி பேசியிருந்த நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்று மாற்றியிருக்கிறேன். இதனை குடியரசு தின நாளில் தொடங்கி இருக்கிறேன். எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும் தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என பேசி இருந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடிகர் மன்சூர் அலிகானால் துவங்கப்பட்டுள்ள இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தமிழர் திரள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்களும் அவருடைய ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் சிறப்புரை ஆற்றி பேசுகையில், அரசியல் மாற்றம் அடிப்படை மாற்றம் மற்றும் தமிழர்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார். அப்போது, தொடர்ந்து இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்.
மேலும், வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் 'EVM மிஷினை உடைத் தெறிய வேண்டும்', 'மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்' என மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், நடிகை திரிஷா உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதே சமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | பாஜக வேட்பாளர்கள் பட்டியல்... 195 மக்களவைத் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ