ICC World Cup 2023 Match Tickets: ஒருநாள் போட்டி வடிவத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அக். 5ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் நவ. 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடர் இந்தியா முழுவதும் உள்ள 10 மைதானங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டு விற்பனையும் கடந்த மாத இறுதியில் நடந்தது. உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு அனைத்து இடங்களிலும் கெடுபிடி அதிகம் இருந்தது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தொடரை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த 10 அணிகளும் மற்ற அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் தலா 1 முறை மோதும். பின்னர், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
சென்னையில் 5 போட்டிகள்
அக். 5ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் கடந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாட உள்ளது. மேலும், இந்திய அணி சென்னையில் விளையாடும் ஒரே போட்டி இது மட்டுமே.
இந்த உலகக் கோப்பை தொடரில் சென்னை உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு பின், நியூசிலாந்து - வங்கதேசம், நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் ஆகிய ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது. சென்னையில் போட்டிகள் அனைத்தும் அக்டோபர் மாதத்திலேயே நிறைவு பெற்றுவிடும். எனவே, அடுத்தடுத்த சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
கடும் கெடுபிடி
மேலும், சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருந்தது என ரசிகர்கள் தெரிவித்தனர். அதிகார்பூர்வமாக டிக்கெட் விற்பனை நடைபெற்ற தளத்தில் டிக்கெட் எடுப்பது எளிமையானதாக இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில் இதுகுறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில், அவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கர் பொருளாளரான ஸ்ரீனிவாசராஜ் உடன் கலந்துரையாடி தனது யூ-ட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீனிவாசராஜ் டிக்கெட் கெடுபிடி குறித்து விளக்கமளித்திருந்தார். அதில்,"எங்களிடம் பெரிய அளவில் ரசிகர்களை அமரவைக்கும் திறன் இல்லை, சேப்பாக்கம் போலல்லாமல், ஈடன் கார்டன்ஸ் மற்றும் அகமதாபாத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான அல்லது 80 முதல் 90 ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கொள்ளளவு கொண்ட மைதானங்கள் ஆகும். எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் கூட்டத்தை திருப்திப்படுத்த முடிகிறது. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், எங்களிடம் சுமார் 30 ஆயிரம் பேர் அமரம் வகையில் தான் வசதி உள்ளது மற்றும் அதனை எங்களால் நீட்டிக்க முடியாது" என்றார்.
சீட் கில்லிங்
மைதானத்தின் மொத்த திறன் அடிப்படையில் டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை என கூறிய ஸ்ரீனிவாசராஜ், மேலும் சீட் கில்லிங் குறித்தும் அஸ்வினிடம் விளக்கினார். "சேப்பாக்கின் திறன் 38 ஆயிரம் ஆகும், மேலும் 5 ஆயிரம் – 6 ஆயிரம் இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. சீட் கில்லிங் என்றால், நீங்கள் பார்வைத் திரைக்கு இடத்தை ஒதுக்கியுள்ளீர்கள்; எங்களிடம் ஊடகப் பெட்டிகள் உள்ளன; எங்களிடம் கேமராக்கள் உள்ளன, அங்கு மக்கள் இருக்கைகளை ஆக்கிரமிக்க முடியாது. ஏதேனும் அசைவு இருந்தால், வீரர்கள் சிரமப்பட்டு போட்டி நிறுத்துவார்கள். அதனால் எங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை" என்றார்.
விற்பனை டிக்கெட்டுகள்
டிக்கெட் விற்பனை முறையை ஸ்ரீனிவாசராஜ்,"எங்களிடம் 33–34 ஆயிரம் இருக்கைகள் உள்ளன, எனவே நாங்கள் அதை ஆன்லைனில் விற்கிறோம். அது எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்து கவுண்டரிலும் விற்கிறோம். பிசிசிஐ விதிமுறைகளின்படி, கவுன்டரிலும், ஆன்லைனிலும் பொதுமக்களுக்கு டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், எங்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களிடம் சில கடமைகள் உள்ளன. நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் அதில் உள்ளது. எனவே அடிப்படையில், யார் முதலில் வருகிறாரோ அவர் அதைப் பெறுவார். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கும்." என்றார்.
மேலும் படிக்க | IND vs PAK: விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ