மஞ்சள் அருமருந்து தான்... ஆனால் இந்த பிரச்சனைகள் இருந்தால் விலகியே இருங்க

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது இருப்பினும், சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் எடுத்துக் கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகை சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல், கல்லீரலை பாதுகாக்க என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

1 /7

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் அரிய கலவை உள்ளது. இது உடல் வலியை போக்கவும், உள்ளுப்புகளில் ஏற்படும் புண் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

2 /7

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த அற்புத மூலிகை என்றாலும், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 

3 /7

மஞ்சளில் உள்ள ​​ஆக்சலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் பிணைந்து, கால்சியம் ஆக்சலேட் படிகங்களை உருவாக்குகின்றன, இவை சிறுநீரக கற்களாக மாறுகின்றன.

4 /7

பித்தப்பையில் கல் பிரச்சனையினால் அவதிப்படும் நோயாளிகள் மஞ்சள் எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

5 /7

இரத்தில் சர்க்கரை குறைவு பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம்,  இரத்தத்தில் சர்க்க்ரை அளவை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

6 /7

இரத்தப் போக்கு பிரச்சனை: இரத்தம் உறைதல் செயல்முறையை மந்தமாக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு என இரத்த போக்குபிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வதை மிகவும் குறைக்க வேண்டும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.