Kanpur Test: அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் - ஸ்ரேயாஸ் அய்யர் கலக்கல்

கான்பூர் டெஸ்டில் சதமடித்த ஸ்ரேயாஸ் அய்யர், அறிமுக டெஸ்டிலேயே சதமடித்த 16வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

Written by - S.Karthikeyan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 26, 2021, 12:44 PM IST
Kanpur Test: அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் - ஸ்ரேயாஸ் அய்யர் கலக்கல் title=

New Zealand vs India: கான்பூரில் நடைபெற்றும் இந்தியா - நியூசிலாந்து (New Zealand vs India First Test Match) முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும், ரவீந்தர் ஜடேஜாவும் நங்கூரம் போல் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை விளையாடியானர். 3வது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் களம் புகுந்த ஸ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்து வீரர் ஜேமிசன் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு அடுத்தடுத்து பவுண்டிரிகளை விளாசினார். 

ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளையும், அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளையும் விளாசிய அவர், தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 16வது இந்திய வீரர் (Shreyas Iyer 16th Indian) என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். இதற்கு முன்பு லாலா அமர்நாத், அரிஜூன் கிரிபால், குண்டப்பா விஸ்வநாத் முகமது அசாரூதீன், சவுரவ் கங்குலி, விரேந்தர் ஷேவாக், தவான், பிரித்திவி ஷா உள்ளிட்டோர் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர். அவர்களுடனான இந்தப் பட்டியலில் ஸ்ரேயாஷும் இணைந்து கொண்டார். 

காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் ஆட முடியாமல்போனது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸின் கேப்டன்சியை இழந்த அவருக்கு, 20 ஓவர் உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை. சோதனையான காலக்கட்டத்தை எதிர்கொண்டிருந்த அவருக்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ், சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

ALSO READ | இந்திய மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாத நியூஸிலாந்து!

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் சூப்பராக ஆடிக்கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவும் (Ravindra Jadeja) 50 ரன்கள் விளாசினார். இவரும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதே பிட்சில் 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் குண்டப்பா விஸ்வநாத்தும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் அந்தப் போட்டியில் 137 ரன்கள் எடுத்தார்.

ALSO READ | யார்க்கர் King நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News