Game Changer Movie OTT Release : ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் ஓடிடியில் வெளியாவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Game Changer Movie OTT Release : கோலிவுட் திரையுலகின் முக்கிய இயக்குநராக வலம் வரும் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியானது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவான இந்த படம், பழைய கதையுடன் இருப்பதாகவும், பார்த்த விஷயங்களையே மீண்டும் இந்த படத்தில் கூறியிருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கூறினர். இந்த நிலையில், இந்த படத்தால் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கலை முன்னிட்டு வெளியான கேம் சேஞ்சர் படம், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்தது. இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜ் உடையது என்றும், இதனை கொஞ்சம் மெருகேற்றி ஷங்கர் படமாக இயக்கியதாகவும் கூறப்பட்டது.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு கேரக்டருக்கு அஞ்சலி ஜோடியாக நடித்திருந்தார், இன்னொரு கேரக்டருக்கு கியாரி அத்வானி ஜோடியாக வந்தார்.
இந்தியன் 2 தோல்விக்கு பிறகு, ஷங்கர் கேம் சேஞ்சர் படம் மூலம் கம்-பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்காகவும் ஷங்கர் எட்டு திக்கில் இருந்தும் விமர்சனங்களைதான் சந்தித்தார்.
ஷங்கர், தான் வைத்திருக்கும் டெம்ப்ளேட் கதையையே, கேம் சேஞ்சர் படத்திலும் வைத்திருந்ததாகவும் இதனால் படத்தில் புதுமையாக எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் கூட இந்த படத்தை பெரிதும் ரசிக்கவில்லை.
கேம் சேஞ்சர் படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியிருப்பதை அடுத்து இந்த படம் இப்போது வரை ரூ.183.79 கோடி கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் மொத்தமாக இந்த படம் வாஷ் அவுட் ஆனதை அடுத்து, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் இப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
கேம் சேஞ்சர் படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இந்தி வர்ஷன், ஜீ 5 தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.