கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவன் சுமித், முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார்.
போட்டியின் போது புனே வீரர் வீசிய 18-வது ஓவரில் கொல்கத்தா வீரர் நைல் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்றிருந்த ஸ்மித், ஸ்டோக்ஸ் இருவரும் பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்து அந்தரத்தில் பறக்க, பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் எதிரே ஓடி வந்த ஸ்மித் மீது பலமாக மோதி இருவரும் பவுண்டரி கோட்டிற்கு வெளியே விழுந்தனர்.
ஆனால் கடைசியாக அம்பயர் அது சிக்சர் என அறிவித்தார்.
புனே அணித்தலைவர் ஸ்மித்தும், அந்த அணியின் மற்றொரு வீரர் ஸ்டோக்ஸூம் அந்தரத்தில் மோதிக்கொண்ட காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
https://t.co/IuyyfBLnHh #VIVOIPL via @ipl
— aratrick mondal (@crlmaratrick) May 3, 2017
இந்த போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.