இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

இந்தியா நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 01:00 PM IST
  • உலக கோப்பை ஆரம்பிக்கு முன் பலம் வாய்ந்ததாக இருந்த அணி, தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது
  • இரண்டாவது போட்டிக்கு ஒரு வார இடைவெளி இருந்தும் இந்தியாவுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை.மாக உள்ளது.
இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா? title=

இந்தியா நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ஆனாலும், இந்திய அணி இன்னும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. இருப்பினும், குரூப் 2 இல் மீதமுள்ள சூப்பர் 12 போட்டிகளில் மற்ற அணிகள், குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் எவ்வாறு விளையாடுகின்றன என்பதைப் பொறுத்து இந்திய அணிக்கு வாய்ப்புகள் உள்ளன.  கிரிக்கெட் ரசிகர்கள் கால்குலேட்டர்களுடன் அமர்ந்து இந்திய அணி அரையிறுதி செல்ல மற்ற போட்டிகளை பார்ப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் முதன்முறையாக, விராட் கோலியின் தலைமையில் டி20 உலகக் கோப்பை 2021ல் அதிர்ச்சியூட்டும் விதமாக குரூப் போட்டிகளில் இருந்தே வெளியேறும் நிலையில் இந்திய அணி உள்ளது.  

உலக கோப்பை ஆரம்பிக்கு முன் பலம் வாய்ந்ததாக இருந்த அணி, தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது.  வீரர்களின் மன வலிமையும் கேள்விக்குறியாகி உள்ளது.  முதல் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும், மேலும் 152 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி 13 பந்துகள் மீதமிருக்க வென்றது பாகிஸ்தான்.

rohit

இரண்டாவது போட்டிக்கு ஒரு வார இடைவெளி இருந்தும் இந்தியாவுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை. நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 20 ஓவர்களில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்தது.  இரண்டு பெரிய தோல்விகள் இந்தியாவின் நிகர ரன் ரேட்டை பெரிதும் பாதித்துள்ளது.  சூப்பர் 12 குழுக்களில் இருந்து தலா 2 அணிகள் மட்டுமே தகுதிபெறும்.  இந்திய அணியின் அரையிறுதி கனவு தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.  குரூப் Bயில் பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3ல் 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.  

2021 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா?

இந்தியாவின் வரவிருக்கும் போட்டிகள்

நவம்பர் 3ம் தேதி அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
நவம்பர் 5ம் தேதி துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக
நவம்பர் 8ஆம் தேதி துபாயில் நமீபியாவுக்கு எதிராக

நியூசிலாந்தின் எதிர்வரும் போட்டிகள்

நவம்பர் 3ம் தேதி துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக
நவம்பர் 5-ம் தேதி ஷார்ஜாவில் நமீபியாவுக்கு எதிராக
நவம்பர் 7ஆம் தேதி அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக

ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் போட்டிகள்

அபுதாபியில் நவம்பர் 3ஆம் தேதி இந்தியா Vs
நவம்பர் 7ம் தேதி துபாயில் நியூசிலாந்துக்கு எதிராக

6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணிக்கு 3 வாய்ப்புகள் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி.  இந்தியா அணி இனி 8 புள்ளிகளை எட்ட வாய்ப்பு இல்லை.  ஆனால்,  ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து 8 புள்ளிகளைப் பெறலாம். நவம்பர் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்தியா அணி அரையிறுதிக்கு செல்ல என்ன தேவை?

அடுத்து வரும் 3 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் .  

வாய்ப்பு 1

அபுதாபியில் புதன்கிழமை ஆப்கானிஸ்தானை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.  மேலும் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வெல்ல வேண்டும்.  ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் ஒரே புள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும்.  

வாய்ப்பு 2

இந்தியா ஆப்கானிஸ்தானை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், மேலும் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும்.  நியூசிலாந்து அணி நமீபியா அல்லது ஸ்காட்லாந்தில் ஒருவரிடம் தோல்வியடைய வேண்டும்.  இது இந்திய அணிக்கு ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணியை பின்னுக்கு தள்ள முடியும்.  

ஸ்காட்லாந்தும் நமீபியாவும் இந்தியாவுக்கு உதவ முடியுமா?

பாகிஸ்தான் தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும்  நமீபியா அணியுடன் தோற்க வேண்டும்.  இந்தியா தனது அடுத்த 3 போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெரும்.   மேலும், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா நியூசிலாந்தை தோற்கடிப்பதன் மூலம் இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது.

ALSO READ ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்தது தவறா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News