IND vs WI 3rd T20I: இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி பல்வேறு அழுத்தம் தற்போது சூழ்ந்துள்ளது. பந்துவீச்சு ஒருபுறம் இருக்க, பேட்டிங் தான் பெருங்கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போட்டி வாழ்வா, சாவா என்ற ரீதியில் இந்திய அணிக்கு இருக்கும் நிலையில், பலரும் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், விமர்சகர்கள், மூத்த வீரர்கள் தரப்பிலும் இந்திய அணிக்கு பல்வேறு அறிவுரைகளும், கருத்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தடுமாறும் கிஷான்
அந்த வகையில், இந்திய அணியின் மூத்த வீரரான வாசிம் ஜாபர் போட்டி குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, மூன்றாவது டி20 போட்டியில இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷானுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது, 25 வயதான இஷான் கிஷான் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஓய்வை கொடுங்கள்
முதல் டி20 போட்டியில் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது போட்டியில் 23 பந்துகளில் 27 ரன்களை தான் அவரால் எடுக்க முடிந்தது. வாசிம் ஜாஃபர் ஊடகம் ஒன்றில் தெரிவித்த கருத்து, 'இஷான் கிஷன் டி20 சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து சிரமப்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், எனவே அவருக்கு சற்று ஓய்வை கொடுங்கள். அடுத்த போட்டியில் அவர் விளையாடும் போது, அவரால் வலுவாக மீண்டு வர முடியும்" என அறிவுரை கூறியுள்ளார்.
இவர் தான் பெஸ்ட்
டெஸ்ட் தொடரில் வலுவான நிலையில் செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்த மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் களமிறக்க வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் குறிப்பிட்டார். ஜெய்ஸ்வால் இரண்டு போட்டிகளில் 88.67 சராசரியில் 266 ரன்கள் எடுத்தார். வாசிம் ஜாஃபர் கூறுகையில், 'யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை எந்த சந்தேகமும் இல்லாமல் தேர்வு செய்வேன்.
ஏனெனில் அவர் அச்சமின்மையை கொண்டு வருகிறார். அவர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது பேட்டிங் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அவர் தனது ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார், தன்னம்பிக்கையுடன் இருக்கிறார், எனவே அவரை அணியில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கக்கூடாது? அவர் டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்து வாய்ப்புகளை தேடி வருகிறார்.
அக்சர் படேலின் பிரச்னை
டி20களில் அக்ஷர் பட்டேலை சிறப்பாகப் பயன்படுத்துவது கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு கடினமாக இருப்பதாகவும் ஜாபர் சுட்டிக்காட்டினார். ஆடுகளம் மெதுவாக இருந்தாலும், இரண்டாவது டி20 போட்டியில் அக்ஷர் ஒரு ஓவர் கூட வீசவில்லை, இடது கை ஜோடியான நிக்கோலஸ் பூரன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோருக்கு எதிராக இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்க ஹர்திக் விரும்பியிருக்க மாட்டார் என்று ஜாஃபர் கருதுகிறார்.
வாசிம் ஜாஃபர் கூறுகையில், 'இது ஐபிஎல் அணியில் இருந்து தேசிய அணிக்கு வரும் அக்சர் படேலுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. இடது கை பேட்ஸ்மேன் எப்போது கிரீஸுக்கு வந்தாலும் பந்து வீச மாட்டார் என்றே தோன்றுகிறது. நிக்கோலஸ் பூரன் எப்போது அடித்து ஆடும் மோடில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவரும் ஷிம்ரோன் ஹெட்மையரும் அவுட் ஆனபோது நான் நினைத்தேன், அவர்களுக்கு அங்கு பந்து கொடுக்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும், கடைசி கட்டத்தில் சஹாலுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்றும் நினைத்தேன்" என்றார்.
மேலும் படிக்க | தோனி vs கோலி vs சச்சின்: மூவரில் யாரிடம் அதிக சொத்துக்கள் உள்ளது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ