India cricket team, World Test Championship Final | இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் நான்கு டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்வி முடிவுகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை விழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி பகலிரவு போட்டியாக நடக்கிறது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனால் இப்போதைய சூழலில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எத்தனை வெற்றிகள் பெற வேண்டும்? என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025 ஏலத்தில் தனித்துவமான சாதனை படைத்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்தியா முன்னேற இருக்கும் வாய்ப்புகள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 போட்டிகள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி எந்த அணியின் துணையும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை அது நடக்காமல் இந்தியா 3-2 என இந்த தொடரை கைப்பற்றினால், இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். 2-2 என பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்தால் அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாகிவிடும். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற மற்ற அணிகளின் முடிவுகள் சாதமாக இருப்பதை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 1-0 என இலங்கை வெற்றி பெற வேண்டும். இதுதவிர, பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இழந்தால் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளின் அனைத்து டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளும் இந்திய அணிக்கு சாதமாக இருந்தால் மட்டுமே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இந்த முடிவு என்பது மிகவும் சிக்கலானது என்பதால் இந்தியா பார்டர் கவாஸ்கர் டிராபியை தொடரை இழந்தால் ஏறத்தாழ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸில் இருந்தும் வெளியேறிவிட்டது என எண்ணிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | 6 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ராணா! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கம்மிதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ