Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, புதன்கிழமை என்று கொண்டாடப்படுகிறது. மாசி மாத கிருஷ்ணபக்ஷ, சதுரதசி திதி அன்று சிவனுக்கு மிகவும் உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராசிக்கு ஏற்ற வகையில் பூஜைகள் செய்வது, வாழ்க்கையில் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும்.
மகா சிவராத்திரி அன்று உருவாகும் அபூர்வ யோகம்
மகா சிவராத்திரியில் உருவாகி இருக்கும் கிரகங்களின் அபூர்வ சேர்க்கை, அனைவருக்கும் சுப பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். எனினும் ராசிக்கு ஏற்றபடி, சிவபெருமான் மனம் மகிழும் வகையில் பூஜைகள் செய்வது, கஷ்டங்கள் அனைத்தும் நீங்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும். சிவராத்திரி தினத்தன்று, சனி பகவான் சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் கும்ப ராசியில் இணைந்திருக்கும். மீனத்தில் ராகுவும், ரிஷப ராசியில் குரு பகவானும், மிதுனத்தில் செவ்வாயும், கன்னியில் கேதுவும், மகர ராசியில் சந்திரனும் இருப்பார்கள்.
மகா சிவராத்திரி தினத்தில் ராசிக்கு ஏற்றி எளிய பரிகாரங்கள்
மேஷ ராசி
சிவலிங்கத்திற்கு வெள்ளம் கலந்த நீரால் அபிஷேகம் செய்வதும் சந்தனம் சாற்றி, வண்ண மலர்களால் பூஜிப்பதும் பலம் தரும்.
ரிஷப ராசி
சிவலிங்கத்திற்கு தயாரினால் அபிஷேகம் செய்வதும், சர்க்கரை அரிசி சந்தனம் ஆகியவற்றை அர்ப்பணித்து, வெள்ளை மலர்களால் அலங்கரித்து வழிபடுவது பலன் தரும்.
மிதுன ராசி
சிவலிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வ இலைகளை கொண்டு அர்ச்சித்து தூப தீபம் ஏற்றி வழிபடுவதும் பலன் தரும்.
கடக ராசி
சிவலிங்கத்திற்கு பால் நெய் அபிஷேகம் செய்வதும், சங்கு மலர் கொண்டு பூஜிப்பதும், சர்க்கரை பொங்கல் நெய் வைத்தியம் செய்தது வழிபடுவதும் பலன் தரும்.
சிம்ம ராசி
சிவலிங்கத்திற்கு வெல்லம் கலந்த நீரால் அபிஷேகம் செய்வதும், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவதும், வில்வ இலை மற்றும் வெள்ளைப் பூக்களால் அர்ச்சித்து வழிபடுவதும் பலன் தரும்.
கன்னி ராசி
சிவலிங்கத்திற்கு கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்வதும், தீபம் தூபம் ஏற்றி வழிபடுவதும், சந்தனம் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்து கைப்படுவதும் பலன் தரும்.
துலாம் ராசி
சிவலிங்கத்திற்கு நறுமண எண்ணெய் அல்லது வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்து, பால் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை நெய்வேத்தியம் செய்து, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து பூஜிப்பது பலன் தரும்.
விருச்சிக ராசி
சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை மற்றும் சிவப்பு மலர்கள் கொண்டு அலங்கரித்து, சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்வது, இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும்.
மகர ராசி
சிவலிங்கத்திற்கு இளநீரால் அபிஷேகம் செய்து, வில்வ இலை மற்றும் சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, சந்தனம் சாட்சி வழிபடுவது பலன் தரும்.
கும்ப ராசி
சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ இலை மற்றும் வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து, தனம் சாட்சி வழிபடுவதால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
மீன ராசி
சிவலிங்கத்திற்கு, பால் அல்லது தயிர் கொண்டு அபிஷேகம் செய்து, வில்வ மலர்களால் அர்ச்சனை செய்து, ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தினால் அலங்கரித்து வழிபடுவது பலன் தரும்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேலும் படிக்க - ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ