12 ஆண்டுகளுக்கு பின் சூரியன் - குரு உருவாக்கும் நவஞ்சம யோகம்... பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்

சூரியன் மகர ராசியில் நுழைந்து பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர சங்கராந்தி அன்று அரிய நவபஞ்சம் யோகம் உருவாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2025, 09:49 AM IST
  • மகர சங்கராந்தியான தைத்திருநாளில், உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது.
  • சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளனர்.
  • மகர சங்கராந்தி அன்று அரிய நவபஞ்சம் யோகம் உருவாகிறது.
12 ஆண்டுகளுக்கு பின் சூரியன் - குரு உருவாக்கும் நவஞ்சம யோகம்... பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் title=

நவபஞ்சம யோக பலன்கள்: பிரபஞ்சத்திற்கு ஆற்றலையும் ஒளியையும் தரும் சூரியக் கடவுள், மகர சங்கராந்தி யான தைத்திருநாளில், தனது திசையை மாற்றிக் கொள்ளும் நிலையில் உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு ஜனவரி 14-ம் தேதியான இன்று பிரவேசிப்பதன் மூலம், பகல் பொழுது நீண்டு, இரவு நேரம் குறையத் தொடங்கும்.

சூரியன் மகர ராசியில் நுழைந்து பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர சங்கராந்தி அன்று அரிய நவபஞ்சம் யோகம் உருவாகிறது. இது அனைத்து ராசிகளுக்குமே மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பொங்கல் தினமான, மகர சங்கராந்தி அன்று உருவாகும் இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களும் ஏதோ ஒரு வகையில் பலன் அடையப் போகிறார்கள். இருப்பினும், 3 ராசிக்காரர்கள் அதிக பலன் பெறக்கூடியவர்கள். இவர்களுக்கு எங்கிருந்தோ திடீரென்று பணம் கிடைப்பது மட்டுமின்றி சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும் வாய்ப்பும் உண்டு. அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

விருச்சிக ராசி

சூரியன் மற்றும் குருபகவான் ஆகிய இருவராலும் ஆசீர்வதிக்கப்படப் போகும் விருச்சிக ராசியினர், வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அடைவார்கள். உங்கள் கடின உழைப்பை உங்கள் மேலதிகாரி பாராட்டுவார், மேலும் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கலாம். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு பதவி உயர்வையும் வழங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். புதிய திட்டத்தில் பணியைத் தொடங்கலாம்.

தனுசு ராசி

நவபஞ்சம் யோகம் உருவாகி செல்வம் பெருக வாய்ப்புகள் உண்டு. வருமான அதிகரிப்பால் வீட்டில் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சூரிய பகவான் உங்கள் மீது ஆசீர்வாதங்களைப் பொழிவார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் அதே வேளையில் வேலைகளை மாற்ற நினைப்பவர்கள் நல்ல ஆபருடன் சலுகையைப் பெறலாம். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்பு கை கூடும் வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | Pongal 2025 Kolam: வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம், இவ்வளவு அழகான காரணம் உள்ளதா?

மகர ராசி

மகர சங்கராந்தி அன்று நவபஞ்சம் யோகத்தை உருவாக்குவது மகர ராசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த யோகம் அமைவதால் உங்களின் மன தைரியமும், உறுதியும் அதிகரிக்கும். இதன் காரணமாக முழு நம்பிக்கையுடன் செயல் புரிவீர்கள். வலுவான நிதி நிலைமை காரணமாக, உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சூரியபகவானின் அருளால் உங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் சில சுப அல்லது ஆன்மீக காரியங்களில் பங்கேற்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குபேரரின் அருளை பரிபூரணமாக பெறும் சில அதிர்ஷ்ட ராசிகள்... வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News