ஆகஸ்ட் மாத ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு திடீர் கோடீஸ்வர யோகம் அடிக்கும்

August Lucky Horoscope 2024: ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் தனது ராசியை மாற்றப் போகிறது. இது 3 ராசிகளுக்கு நன்மை பயக்கும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2024, 03:59 PM IST
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கையால் எதிலும் சிறப்பான வெற்றியை பெற்றிடலாம்.
ஆகஸ்ட் மாத ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு திடீர் கோடீஸ்வர யோகம் அடிக்கும் title=

Mars Transit 2024: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்களுக்கு பயணிப்பார். அது மட்டுமின்றி செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி ஆகும். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். நேற்று ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்த செவ்வாய் அடுத்த மாதம் 26 ஆம் தேதி தனது ராசியை மாற்றும். ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் பெயரச்சி அடையப் போவது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் தரும். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ராசி மாற்றம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடக்க உள்ளது. இது சில ராசிக்காரர்களை செல்வந்தர்களாக்கலாம்.

கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஆகஸ்ட் 26-ம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி அடைவதால் பல ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள். செவ்வாய் பெயர்ச்சியால் பல ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். எனவே செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | எண் ஜோதிடம்... 1 முதல் 9 வரை... ஆடி மாத எண்ணியல் பலன்கள் கூறுவது என்ன..!!

மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிடத்தின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரம் நிலை சிறப்பாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். திருமணம் சுபகாரிய முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம் (Leo Zodiac Sign): ஜோதிடத்தின்படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, கௌரவ உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை முன்னேற்றமும், நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் லாபமும் பெற்றிட முடியும். தொழில் முனைவோருக்கு முதலீடு செய்ய சாதகமான காலமாக இருக்கும்.

கன்னி (Virgo Zodiac Sign): ஜோதிடத்தின்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும், பண பலம் பெறுவார்கள். பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். செல்வம் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கையால் எதிலும் சிறப்பான வெற்றியை பெற்றிடலாம். அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள்.  தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Jupiter Transit 2024: குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News