சோமசுந்தர கடவுள் என்பது சிவனை குறிப்பது. சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருளும் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். சிவனை மகிழ்விக்க சிவ ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். சிலர் நாள் முழுவதும் எந்த உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். ஆனால், முடியாதவர்கள் அப்படி வருத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல எளிமையான சைவ உணவை ஒருவேளைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது பழங்களையும் சாப்பிடலாம்.
மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
விரத நாள் அன்று சிவ பூஜை செய்து, சிவாஷ்டகம், சிவ அஷ்டோத்திரம் போன்ற உங்கள் தெரிந்தவற்றை சொல்லி மனதார சிவனை தியானித்து விரதமிருந்தால், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
வீடுகளில் சிவபூஜை செய்து பழக்கமில்லை எனில், அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று அங்கே பஞ்சாமிர்த அபிஷேகம், பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, உங்களால் இயன்ற பிரசாதத்தை செய்து விநியோகிக்கலாம்.
மேலே கூறிய எதுவும் முடியவில்லை என்றால், உங்களுக்கு எந்த ஸ்தோத்திரமும் தெரியவில்லை என்றாலும் கவலை இல்லை. ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டும் சொன்னால் போது. உங்களால் முடிந்தால், காலையில் அல்லது மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வரலாம்.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விரும்புபவர்கள், திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சிவபெருமானை நினைத்து இந்த சோமவார விரதத்தை கடைப்பிடித்து வந்தால், பிரிந்தவர்கள் எங்கிருந்தாலும் உங்களை தேடி வருவார்கள். இந்த விரதம் அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது.
இதனால் கணவனை பிரிந்த மனைவி, மனைவியை பிரிந்த கணவன் மனம் மாறி ஒன்று சேருவார்கள். அதோடு, மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், ஆகியவை நீங்கி, வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளி வீசும்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR