ஸ்ரீதேவி ரசிகர்கள் காபி ஆர்ட் மூலம் அஞ்சலி -வீடியோ!

ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர்கள் மனதை கவரும் வண்ணம் ஸ்ரீதேவியின் உருவப்படத்தை காபி ஆர்ட் செய்துள்ளனர்!

Last Updated : Mar 16, 2018, 07:36 AM IST
ஸ்ரீதேவி ரசிகர்கள் காபி ஆர்ட் மூலம் அஞ்சலி -வீடியோ! title=

ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் ஜான்வி நடித்துவந்த படத்தின் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 

முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.

அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். 

திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதியடுத்து, ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஸ்ரீதேவி உருவப்படம் மணல் போன்ற பல வற்றை செய்து அஞ்சலி செய்து வருகின்றனர். இதையடுத்து, ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர் ஒருவர் காபி-யில் காபி ஆர்ட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....! 

 

 

Trending News