குஷியில் PF உறுப்பினர்கள்: அதிகரிக்கும் EPF வட்டி விகிதம், முக்கிய அறிவிப்பு விரைவில்

EPF Interest Rate: இன்னும் சில நாட்களில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. பிஎஃப் வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

EPFO Udpate: இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஎஃப் வட்டி விகிதங்கள் உயர்த்தியுள்ளது. PF வட்டி விகிதம் 2022-23 இல் 8.15 சதவீதமாகவும், 2023-24 இல் 8.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வட்டி உயரும் என்ற எதிர்பார்ப்பு இபிஎஃப் சந்தாதாரர்கள் இடையே உள்ளது.

1 /11

இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு முக்கியமான ஒரு செய்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பரிசு ஒன்று கிடைக்கவுள்ளது.

2 /11

2025 பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று வெளியான அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

3 /11

இதைத் தொடர்ந்து ​​சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அரசாங்கம் விரைவில் மேலும் நல்ல செய்திகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் கூடிய விரைவில் இபிஎஃப் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 /11

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28 அன்று கூடும். 2024-25 நிதியாண்டிற்கான இபிஎஃப் வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 /11

மத்திய தொழிலாளர் அமைச்சர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். இந்த கூட்டத்தில் முதலாளிகள் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பிஎஃப் வட்டி விகிதம் இதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

6 /11

பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு தேவை மற்றும் நுகர்வை அதிகரிப்பது மிக அவசியமாகும். இதற்கு வழிவகை செய்யும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்திய பிறகு, PF வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் இப்போது பரிசீலிக்கலாம். இது நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு PF சேமிப்பில் அதிக வருமானத்தை வழங்கும. இதனால் அவர்கள் மற்ற செலவுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

7 /11

அரசாங்கம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இபிஎஃப் கணக்குக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இபிஎஃப் உறுப்பினர்கள் இந்த முறையும் மற்றொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.

8 /11

2022-23 ஆம் ஆண்டில், அரசாங்கம் PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டில் இது 8.25% ஆக உயர்த்தப்பட்டது. அரசாங்கம் இப்போது அதை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

9 /11

வங்கிகளின் தற்போதைய அடிப்படை விகிதத்தின் அடிப்படையில், PF வட்டி விகிதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அரசாங்கம் கடந்த முறை போலவே இந்த முறையும் வட்டி விகிதத்தை 0.10% அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். 

10 /11

நாட்டில் ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள் EPFO ​​கணக்குகளைக் கொண்டுள்ளனர், புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்துகொண்டு இருக்கிறார்கள். EPFO ​​ஓய்வூதிய நிதியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இபிஎஃப் வட்டி விகித உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.