Thaipusam Festival 2025 : முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சென்னையில் உள்ள எந்தெந்த முருகன் கோயிலுக்கு செல்லலாம்? இதோ லிஸ்ட்!
Thaipusam Festival 2025 : தமிழ் கடவுள் என பக்தர்களால் போற்றப்படும் முருகனுக்கு உகந்த தைப்பூச நாள் இன்று. கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா, பிப்., 11ஆம் தேதியான இன்று தைப்பூச திருநாளாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் இந்த நாளில் தங்களின் 48 நாட்கள் விரதத்தை முடித்து முருகனை போற்றி வணங்குவர். இந்த நாளில், முருகனின் அருளை பெற, சென்னையில் உள்ள சில பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்லலாம். அவை எந்தெந்த கோயில்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
உலகம் முழுவதும் இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் முருகனை மனமுருக வேண்டி சுவாமி தரிசனம் செய்வர். இங்கு செல்ல முடியாதவர்கள், சென்னையில் இருக்கும் சில கோயில்களுக்கு சென்றாலும், முருகனின் அருளை பெறலாம்.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்று, வடபழனி முருகன் கோயில். தைப்பூச திருநாளில், இங்கு செல்லும் பக்தர்கள் மன அமைதிக்காகவும் வாழ்வில் வெற்றி பெற வேண்டியும் முருகனை வழிபடுக்கின்றனர்.
சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலும், இந்த தைப்பூச திருநாளில் வழிபடுவதற்கு ஏற்ற கோயிலாகும்.
புரசைவாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசுவாமி ஆலையம், சென்னையில் இருக்கும் பழமை வாய்ந்த முருகன் கோயில்களுள் ஒன்றாகும். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் இந்த ஆலையத்தில் அலையலையாய் திரளும் பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு முருகனை வழிபடுவர்.
சென்னையின் ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமைந்திருக்கும் முருகனின் ஆலையங்களுள் ஒன்று, எட்டாம்படை வீடு. இந்த கோயிலில் உள்ள முருகனை வழிப்பட்டால் தங்களின் இன்னல்கள் தீரும் என முருக பக்தர்கள் நம்புகின்றனர்.
பெசண்ட் நகரில் அமைந்திருக்கும் அறுபடை வீடு முருகன் கோயிலில், முருகனின் ஆறு படை வீடுகளும் அமைந்துள்ளன. அறுபடை வீட்டு கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், இங்கு சென்று முருகனின் அருளை பெறலாம்.
இந்திரா காந்தி நகர், தண்டையார்பேட்டையில் அமைந்திருக்கும் கோயில், அருட்கோட்டம் முருகன் கோயில். இந்த கோயிலுக்கு, தைப்பூச திருநாளன்று சென்று முருகனை வழிபடுவது வாழ்வை ஒளிமையமாக்கும் என நம்பப்படுகிறது.