உடல் பருமனை சட்டென்று குறைக்கும் சுரைகாய் சூப்... தயாரிக்கும் முறை!

சுரைக்காய் சூப்பின் நன்மைகள்: சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்துடன், பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், வாதம், பித்தம் மற்றும் கபம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

சுரைக்காயில் அதிக அளவு நீர் உள்ளது. சுரைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறலாம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். அதோடு, சுரைக்காய் சூப்பை தினமும் அருந்து வந்தால், உடல் எடை வியக்கத் தக்க அளவில் குறையும் என்பதோடு, மன அழுத்தத்தை போக்கும் திறன் சூப்பில் உள்ளது. 

 

1 /5

ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், வாதம், பித்தம் மற்றும் கபம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சுரைக்காய் ஜூஸ் தினமும் அருந்து வந்தால், உடல் எடை வியக்கத் தக்க அளவில் குறையும் என்பதோடு, மன அழுத்தத்தை போக்கும் திறன் சூப்பில் உள்ளது. இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய சுரைக்காய் சூப்பை தயாரிக்கும் முறையை இங்கே அறிந்து கொள்ளலாம்.  

2 /5

சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். ஏனென்றால், சுரைக்காய் சூப் குடித்தால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம், அதிகப்படியான உணவைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்கலாம்.

3 /5

சுரைக்காய் சூப் குடிப்பதால், நாள் முழுவதும் நீர்ச்சத்துடன் இருக்கும். எனவே, இந்த வெயில் காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க விரும்பினால், சுரைக்காய் சூப் குடிக்கலாம். அதே நேரத்தில், சுரைக்காய் சூப் குடிப்பதும் உங்கள் சரும பொலிவை மேம்படுத்துகிறது.  

4 /5

சுண்டைக்காய் சூப் சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்துக்களும் நிறைந்துள்ளன. சுரைக்காயில் கோலின் உள்ளது. கோலின் என்பது மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு வகை நரம்பியக்கடத்தி ஆகும். எனவே, தினமும் சுரைக்காய் சூப் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.  

5 /5

முதலில் ப்ரஷர் குக்கரில் நீர் ஊற்றி சுரைக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி போட்டு நன்றாக வேக வைக்கவும். பிறகு அவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் மீது சிறிது நெய்யில் தாளித்த சீரகம் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக அதில் உப்பு மற்றும் மிளகு தூளைச் சேர்க்கவும். இப்போது உடல் எடையைக் குறைக்கும் மேஜிக் பானமான சுரைக்காய் சூப் தயார்.