எச்சரிக்கை... லிவரை மெல்ல கொல்லும் இந்த உணவுகள் வேண்டாமே

இதயம் மட்டுமல்ல கல்லீரலும் 24 மணி நேரமும் வேலை செய்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்யும் கல்லீரல், தனது வேலையை சிறிது நிறுத்தினால் கூட, உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

 

இன்றைய மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக, பெரும்பாலானோருக்கு, கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பதை காணலாம்.

1 /7

உடலின் டீடாக்ஸ் பேக்ட்ரியாக  விளங்கும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம். குடிப்பழக்கம் மட்டுமல்ல, மோசமான உணவுப் பழக்கமும் கல்லீரலை காலி செய்து விடும்.

2 /7

கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்ட கொழுப்பு கல்லீரல் ஏற்படுவதை தடுக்கவும், சில உணவுகளுக்கு நோ சொல்ல வேண்டியது அவசியம். அத்தகைய உணவுகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

3 /7

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், செயற்கை பழ பானங்கள், சோடா பானங்கள், கேக் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளில் சர்க்கரை மித மிஞ்சி உள்ளது. இவை நேரடியாக கொழுப்பாக மாறி, கல்லீரலில் சேர்ந்து கொழுப்பு கல்லீரல் உருவாகிறது.  

4 /7

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் எக்கச்சக்க கொழுப்பும் சோடியமும் நிறைந்துள்ளது. அதோடு நீண்ட நாள் கெடாமல் இருக்க ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது லிவரை காலி செய்துவிடும்.

5 /7

மைதா உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் அதிகம் கொண்ட மைதாவில் செய்யப்பட்ட பரோட்டா, பீட்சா பாஸ்தா வகை உணவுகள் கல்லீரலுக்கு எதிரி எனலாம்.

6 /7

துரித உணவுகளில் ட்ரான்ஸ்பாட்டுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது கொழுப்பாக மாறி கல்லீரலில் சேர்ந்து வேட்டுவைத்து விடுகின்றன.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.