இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த நாடே திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விலைவாசி உயர்வால் வாழ வழியில்லாமல் இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை என்றும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்த நேரிடும் எனவும் அலி சப்ரி கூறியுள்ளார். இலங்கை நிதி அமைசர் ஐ.எம்.எப்வுடன் கலந்துரையாட எதிர்வரும் 18ம் தேதி வொஷிங்டன் நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள்ளது.
இலங்கைக்கு அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘உடனடியாக மருந்துகளைக் கொடுங்க’ - உலக நாடுகளிடம் கைநீட்டும் இலங்கை டாக்டர்கள்
வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கி பேட்டியில்,
அவர் மேலும் கூறியதாவது:
5 வாரங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோர திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியையும் கோரவுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைக்கவும் கடனை மீள செலுத்துவதற்கும் தேவையான கால அவகாசத்தை கோருவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச இறையாண்மை ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க நிதியை சரிசெய்யும் முயற்சியில், நாடு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக மத்திய வங்கியின் ஆளுநர், எதிர்வரும் 18ஆம் தேதி வாஷிங்டன் நோக்கி பயணம் செய்ய உள்ளார் என்றார்.
மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR