தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம் கோவிலில் முதல் மரியாதையை பெற மீனாட்சி மற்றும் அவளது மகள்களுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்க அவர்களை தனித்தனியாக அட்டாக் செய்ய வில்லிகள் பிளான் போட்ட நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அக்கினி குண்டத்தை மீனாட்சி கையில் ஏந்தியபடி நடந்து வர அவரை ஒரு கோவிலில் அடைத்து விடுகின்றனர், பிறகு தூசு, குப்பை ஆகியவை அந்த குண்டத்தில் விழுந்து புகை அதிகமாக வர மக்கள் மீனாட்சியை காப்பாற்றுகின்றனர்.
மறுபக்கம் சிலையை தேடி வந்த சக்தியின் காலில் ஒரு கல் மோத சந்தேகத்துடன் அங்கு தோண்டி பார்க்க தேடி வந்த சிலை சக்திக்கு கிடைக்கிறது. சிலையுடன் திரும்பி கோவிலுக்கு வரும் போது பூஜா ஏற்பாடு செய்த ஆட்கள் அவளை கொல்ல வர கிரி, திடியன் அவர்களை கல்லால் அடித்து துரத்தி சக்தியை காப்பாற்றுகின்றனர்.
கோவிலில் ஷக்தி, மீனாட்சியை இன்னும் காணவில்லை. அதனால் அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க என்று வில்லிகள் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மீனாட்சி வந்து விடுகிறாள், கொஞ்ச நேரத்தில் சக்தியும் வந்து விட அதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர், ரங்கநாயகி, புஷ்பா, மீது ஊர் மக்கள் சாணியை கரைத்து ஊற்ற முயல மீனாட்சி அதை தடுத்து நிறுத்துகிறாள். இதனால் மிகுந்த கோபத்துடன் வீட்டிற்கு வந்த ரங்கநாயகியை பூஜாவும் அவளது அம்மாவும் ஏற்றி விட்டு மீனாட்சி வீட்டையும் மெஸ்ஸையும் தரைமட்டமாக்க இடித்து நொறுக்க அனுமதி வாங்குகின்றனர்.
மேலும் இடித்து நொறுக்கும் நேரத்தில் வெற்றி இருக்க கூடாது என்பதால் இருவரையும் வெளியே அனுப்பி வைக்கின்றனர். மீனாட்சி மெஸ்ஸையும் வீட்டையும் தரைமட்டமாக்க இடித்து நொறுக்க புல்டோசருடன் புஷ்பா, பூஜா மற்றும் சங்கிலி ஆகியோர் வருகின்றனர். மறுபக்கம் வெளியில் கிளப்பிய வெற்றியை போட்டு தள்ள அடியாட்களை ஏற்பாடு செய்கிறாள் பூஜா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ