பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் ஆதித்த கரிகாலனாக வந்து பலரது மனங்களை ஆட்கொண்டவர் சியான் விக்ரம். அடுத்து, இவர் நடிக்கும் தங்கலான் படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன, இந்த நிலையில் டி.ஜே ஞானவேல் ராஜா இயக்கும் ரஜின்காந்தின் 170ஆவது படத்தில் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தலைவர் 170:
ரஜினி நடித்து முடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை டி.ஜே ஞானவேல் ராஜா இயக்குகிறார். பயணம், கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் போன்ற பாராட்டுக்குறிய படைப்புகளை கொடுத்த இவர், ரஜினியை வைத்து இயக்கும் விஷயத்தை கேள்வி பட்டவுடன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து இதில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் டி.ஜே ஞானவேல் ராஜா.
மேலும் படிக்க | ஹார்மோன் ஊசி போட்டாரா ஹன்சிகா... மௌனத்தை கலைத்த அவரின் தாயார்!
வில்லனாக விக்ரம்?
தலைவர் 170 படத்தின் கதையை விக்ரமிடம் சொன்ன ஞானவேல் ராஜா அதில் அவரை வில்லனாக நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். விக்ரமிற்கு கதை மிகவும் பிடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிரான வில்லனாக என்னால் நடிக்க முடியாது எனக்கூறிவிட்டாராம். இருந்தாலும் விடாத இயக்குநர், விக்ரமை தொடர்ந்து படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.
விக்ரமிற்கு லைகா இவ்வளவு பணம் கொடுத்ததா?
ரஜினியின் தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து, லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் விக்ரமை இந்த படத்தில் நடிக்க வைக்க 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் பேச்சு அடிபடுகிறது. பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 திரைப்படங்களில் விக்ரம் நடித்திருந்ததால், லைகா நிறுவனத்திற்கும் விக்ரமிற்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்றுவரை வெளியாகவில்லை.
ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடித்தால் எப்படியிருக்கும்?
நடிகர் விக்ரம் படத்திற்கு படம் மாறிக்கொண்டே இருப்பவர். இவர் கடின உழைப்பு போடாத படங்களே இல்லை என்றுகூட சொல்லாம். விக்ரம் இதற்கு முன்னர் அந்நியன், இருமுகன் போன்ற படங்களில் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் விக்ரம்தான் முழுமையான வில்லன் என ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில், தமிழின் மாபெரும் நடிகராக பார்க்கப்படும் நடிகர் ரஜினிக்கு வில்லனாக இவர் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என சில சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், ரஜினிக்கு எதிரான வில்லனாக நடிக்க விக்ரம் மறுப்பதால் இந்த காம்போவை திரையில் பார்க்க முடியுமா என்பதை காத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.
விக்ரமிற்கு விபத்து:
நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பின் போது அவருக்கு எலும்பில் அடிப்பட்டுவிட்டது. இதனால், அவர் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இதையடுத்து, தங்கலான் படத்தின் பிற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்ரம் பூரண குணமடைந்த பிறகு தங்கலான் பட ஷூட்டிங்கிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Thalaivar 170: கெட்டவன் vs கெட்டவன் - ரஜினிக்கு வில்லானாகும் சீயான் விக்ரம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ