விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2024, 06:01 PM IST
  • விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம்
  • அஜர்பைஜானில் தொடங்க வேண்டியது
  • நிறுத்தப்பட்டுள்ளதற்கான காரணம்!
விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்.. title=

அஜித் நடிப்பின் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போய் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகிழ்திருமேனி இயக்கம் இந்த படம் அஜர்பைசானில் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறதாம். 

விடாமுயற்சி திரைப்படம்: 

துணிவு படத்திற்கு பின் அஜித் கமிட்டான படம் விடாமுயற்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கவே மிகவும் தாமதமானது. 

கடந்த ஆண்டில் தான் அஜித் உட்பட பிற பட குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க தாமதமானது நடிகர் அஜித் தான் என கூறப்பட்டது. காரணம், படத்தின் அறிவிப்பு வெளியான சமயத்தில் பைக் டூர் சென்றவர் திரும்பி வரவே வெகு நாட்கள் எடுத்தது. இதனால் படக்குழுவினர் டென்ஷன் ஆனதாகவும் கூறப்படுகிறது. 

தாமதமாகும் படப்பிடிப்பு:

விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் முடிவுற்றதை எடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை நடத்த முடியாமல் படக்குழுவினர் திணறி வருகின்றனர். இது குறித்து அப்டேட் கேட்டுக்கேட்டு சலித்துப்போன ரசிகர்கள் பின்னர் அதை கேட்பதையே விட்டு விட்டனர். இதற்கு காரணம் அஜித்தான் என்று கூறப்படுகிறது.

வேறு படத்தில் கமிட்டான அஜித்..

நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே வேறு படத்திலும் கமிட்டாகி விட்டார். அவரது ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அஜித்தை பொறுத்தவரை, அவர் நடிக்கும் படங்கள் சட்டென நடத்தி முடித்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். ஆனால், ஆதிக் கொஞ்சம் பொறுமையாகத்தான் எடுப்பாராம். விடாமுயற்சி படத்தையும் அதே போல அவர் பொறுமையாக எடுப்பதை பார்த்து, டென்ஷனான அஜித், கடுப்பாகி வேறு படத்தில் கமிட்டானதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் தளத்தில் விபத்து! மரண பயத்தில் அஜித்-ஆரவ்! திக் திக் வைரல் வீடியோ..

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு சைன் செய்து, ஐதராபாத்திற்கு படப்பிடிப்பிற்கு சென்ற அவர் 2 மாதத்திற்குள்ளாகவே தனது பங்கு படப்பிடிப்பினை முடித்து விட்டாராம். இதன் சண்டை காட்சிகள் மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தால் அவர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அஜித்தின் ரசிகர்களே அவர் மீது கடுப்பில் இருக்கின்றனர். 

சம்பள பிரச்சனையா?

விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித், இப்படத்திற்காக 105 கோடி சம்பளமாக கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் நிதி பிரச்சனையில் சிக்கியிருப்பதால் அஜித்தை சம்பளத்தை குறைத்துக்கொள்ளும் படி கூறுகின்றனர். இதனால் டென்ஷனான அஜித், வேண்டுமென்றே படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுத்த வேண்டும் என இப்படி செய்வதாகவும் கூறப்படுகிறது. 

விடாமுயற்சி படக்குழு!

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் நாயகிகளாக த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்.. விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News