பீட்ரூட் ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அது சிலருக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு பழக்கங்களும் போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
உடலுக்குத் தேவையான அளவுக்கு மீறி எந்த ஒரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டால் அமிர்தம் கூட நஞ்சு ஆகும். இதுபோல் தான் பீட்ரூட் ஜூஸும். சிலருக்குப் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்குத் தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிறுநீரகப் பிரச்சனை: பீட்ரூட் ஜூஸ் சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கவே கூடாது என்று கூறப்படுகிறது. பீட்ரூட் ஜூஸ் அதிகமாகக் குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
ரத்த அழுத்தம்: குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. ஏனெனில் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் தலைச் சுற்றல் அல்லது மயக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வாமை: ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது மீறிக் குடித்தால் அவர்களுக்கு அரிப்பு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
செரிமான பிரச்சனை: எரிச்சல் கொண்ட குடல் நோய் கொண்டவர்கள் பீட்ரூட் ஜூஸை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பெடூரியா தொற்று: சிலருக்குச் சிறுநீர் சிவப்பு நிறமாக மாறும் பிரச்சனை இருக்கும் இவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிக்கக் கூடாது.
கால்சியம் சத்து குறைவு: உங்கள் எலும்பு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைக் குறைவாக்குங்கள். மேலும் கால்சியம் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சில உணவுகள் பாதுகாப்பாகச் சாப்பிட வேண்டியது அவசியம். இவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிக்க வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)