Government job Tamilnadu | தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு லட்சக்கணக்கானோர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இப்போது ஒரு சூப்பரான வாய்ப்பு உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் டிகிரி முடித்திருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றலாம். விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, வேலை என்ன?, எப்படி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, வேலை எந்த ஊரில் உள்ளது என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேலை. இது குறித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், "மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்துள்ளது. அதில், " அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டாச்சியர் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டாச்சியர் திரு.அருன்ராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மாவட்டாச்சியரின் தலைமையில் பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட உள்ளது. மேற்படி அலகில் இளம் வல்லுநர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணியிடத்திற்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு. தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டுமே) அல்லது கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல். தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்படி பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன், தரவு பகுப்பாய்வில் தோச்சி, தன்னிச்சையாகவும். குழுவுடலும் இணைந்து பணிபுரியும் திறன் ஆகியவை கட்டாயம் மேற்படி பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாதம் ரூ.50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணிக்கான தங்கள் விண்ணப்பத்தினை புள்ளியியல் உதவி இயக்குநர். செங்கல்பட்டு கோட்டம், 4வது தளம் "B" பிளாக் அறை எண் 4-05, மாவட்டாச்சியர் வளாகம். செங்கல்பட்டு 603001 என்ற முகவரிக்கு வரும் 29ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி இப்பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம் செங்கல்பட்டு மாவட்டம் இணையதள முகவரியான https://chengalpattu.nic.in/ இல்
வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவரங்களுக்கு கைபேசி எண்கள் 8754223132 மற்றும் 9025843804 மூலம் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்..! இந்த ஆவணம் இணைக்க தேவையில்லை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ