Madha Gaja Raja Box Office Collection : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் விஷால். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். ஆனால், இவர் 12 வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த மதகஜராஜா படம், சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த முக்கிய அறிவிப்பை விஷாலே வெளியிட்டிருக்கிறார்.
12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா:
நடிகர் விஷால், தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போது சுந்தர்.சி-யும் சில ஹிட் படங்கள் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தார். விஜய் ஆண்டனி, அந்த வருடத்தில் படங்களில் ஹீரோவாக நடிக்காமல், இசையமைத்து மட்டும் கொடுத்து கொண்டிருந்தார். இப்படி, மக்கள் விரும்பும் ஒரு நல்ல கூட்டணியில் உருவான படம், மதகஜராஜா. பட வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீஸிற்கு ரெடியாக இருந்த நேரத்தில், நிதி பிரச்சனை காரணமாக அதன் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது, அப்போது என்று கூறி, கடைசியில் 12-13 வருடங்கள் கழித்து, மதகஜராஜா படம், இந்த 2025 பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது. படம், விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றிருப்பதை மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இதன் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
100 கோடி வசூலை எதிர்நோக்கி..
மதகஜராஜா படம் வெற்றிபெற்றுள்ளதை தாெடர்ந்து, அதன் நாயகன் விஷால் சார்பாக, பத்திரிகை செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்களை இங்கு பார்ப்போம்.
அனைவருக்கும் வணக்கம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர்.
மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி..
இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும் என்பதற்கு இப்படம் மிகப்பெரிய சாட்சியாக அமைந்துள்ளது.
திரையுலகில் நல்ல திரைப்படங்கள் பல சமயங்களில் வெளியிட முடியாத சூழ்நிலையில் காலம் கடந்து வெளியாகி தோல்வியும் அடைந்துள்ளது உதாரணமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த உதயா என்கிற திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து வெளியான போது மக்களின் வரவேற்பு திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால் மதகஜராஜா அதற்கெல்லாம் விதிவிலக்கா அமைந்துள்ளது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் எப்படி மக்களிடம் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக இருக்குமோ அதுபோல் மதகஜராஜாவும் குறிஞ்சி மலர் போல பிரசித்தி பெற்று வருகிறது.
நீதித்துறையில் ஒரு ஆங்கில சொல் உண்டு " Justice denied is Justice delayed " என்பார்கள் அதேபோல் திரையுலைகளும் நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமாயின் அவை தோல்வி படமாக அமையும் என்பதையும் மாற்றி மதகஜராஜா தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது அதற்கெல்லாம் காரணம் தமிழக மக்களின் வரவேற்பு மட்டுமே.
வசூல்:
மதகஜராஜா படம், வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.3-5 கோடி ரூபாய் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது. பெரிய ப்ரமோஷன்கள் எதுவும் இல்லை என்றாலும் படத்தை பார்த்துவிட்டு, பிறர் சொன்ன கருத்துகளை வைத்தே பிறர் படத்தை சென்று பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியாகியிருப்பதாலும் இதன் வசூல் எகிறி வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும், இப்படம் சுமார் 6.20 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மதகஜராஜா படம், மொத்தமாக உருவானதே சுமார் 15 கோடி பட்ஜெட்டில்டான் எனக்கூறப்படும் நிலையில், இந்திய அளவில் இப்படம் 18 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வெகு விரைவில் லாபம் பார்த்துள்ளது. இது, சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல் தானே தவிர இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகிவில்லை.
மேலும் படிக்க | ஜாலியா? காலியா? மத கஜ ராஜா படம் எப்படி? நெத்தியடி திரை விமர்சனம்!!
மேலும் படிக்க | மதகஜராஜா திரைப்படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ