மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில், திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் போனி கபூர் கீர்த்தி சுரேஷ் குறித்து கூறியுள்ள தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாமன்னன் இசை வெளியீட்டு விழா:
கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம், மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், படத்தின் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற இந்த விழாவில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், கே.எஸ் ரவிகுமார், கவின், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ‘நல்ல நண்பன் நீ..’விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா வெளியிட்ட எமோஷனல் பதிவு..!
போனி கபூர் பேட்டி..
பிரம்மாண்ட அளவில் நடைப்பெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, பிரபலங்கள் அனைவரும் பேட்டி கொடுத்தனர். அப்போது, மாமன்னன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் குறித்து பாராட்டி பேசினார். அப்போது கீர்த்தி சுரேஷ் குறித்து பேசிய போனி கபூர் சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்கும் அளவிற்கும் ஒரு கூற்றை கூறினார்.
“நான் பார்தவர்களில் அழகான ஒருவர் கீர்த்தி..”
போனி கபூர் பேசுகையில், “நான் பார்த்ததிலேயே என் மனைவிக்கு அடுத்து அழகான பெண்ணா உள்ளவர் கீர்த்தி சுரேஷ்தான்” என நச்சென்று ஒரு பிக்-அப் லைனை கொடுத்தார் போனி கபூர். இதை கேட்ட ரசிகர்கள் அவர் கூறியதை இணையத்தில் ட்ரெண்டாக்க தொடங்கினர்.கீர்த்தி சுரேஷ், தனது அழகான சிரிப்பிற்கும் நேர்த்தியான நடிப்பு திறமைக்கும் பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அவரைப்பற்றி ஒரு பெரிய திரைப்பிரபலமே கூறுவது இதுதான் முதல்முறை.
“உதயநிதி இன்னொரு படம் நடிக்க வேண்டும்..”
நடிகர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்படுகிறார். சமீப காலமாக முழுநேர அரசியல்வாதியாக மாறி இருக்கும் இவருக்கு, மாமன்னன் படம்தான் கடைசி படமாக இருக்கும் என பலர் பேசி வருகின்றனர். அதை நிரூபிப்பது போலவே, உதயநிதியும் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இது குறித்து போனி கபூர் மாமன்னன் பட விழாவில் பேசினார். அப்போது, “தோனி தமிழ் மக்களுக்காக இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என கூறியிருந்தார். அது போல உதயநிதியும் மக்களுக்காக இன்னும் ஒரு படம் என்னுடன் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். இதையடுத்து, உதயநிதியும் அமைச்சர் பணிகள் நிறைய இருப்பதால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
“மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதே செய்ய வேண்டும்..”
அரசியலின் அரப்பணிகளில் ஈடுபட உள்ள உதயநிதி ஸ்டாலினை சினிமாவை விட்டு போக வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். இயக்குநரும் நடிகருமான கே.எஸ் ரவிகுமார், உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இவரைத்தவிர, இன்னும் பல திரை பிரபலங்களும் இதையே உதயநிதியிடம் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | காதலோடு இயற்கையை இணைத்த கில்லாடி இயக்குநர் மணிரத்னம் சினிமாவற்குள் வந்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ