EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது. பழைய விதிகளிலும் மாற்றங்களை செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கவும், இபிஎஃப் கணக்கு செயல்பாடுகளை எளிமையாக்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இபிஎஃப்ஓ தனது செயல்பாடுகளில் பல மேம்படுத்தல்களை செய்துள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான அப்டேட்
சமீபத்தில் EPFO அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு புதிய புதுப்பிப்பைக் கொண்டு வந்துள்ளது. புதிய புதுப்பிப்பின்படி, இப்போது EPFO உறுப்பினர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட விவரங்களை எளிமையான முறையில் அப்டேட் செய்ய முடியும். இதில் பிறந்த தேதி, குடியுரிமை, பெற்றோரின் பெயர், திருமண நிலை, கணவன்-மனைவியின் பெயர், பாலினம் மற்றும் நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறும் தேதி உள்ளிட்ட பிற விவரங்கள் அடங்கும். இதற்கு முன்னரும், EPFO இதுபோன்ற பல மாற்றங்களைச் செய்துள்ளது.
சுமார் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கணக்குகள் இப்படிப்பட்ட புதுப்பித்தல்களுக்காக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு பிறகு இந்த உறுப்பினர்களுக்குப் பலன் கிடைக்கும்.
EPF Account: இபிஎஃப் கணக்கில் எதை எல்லாம் புதுப்பிக்க முடியும்?
உறுப்பினர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட விவரங்களை எளிதாக சரிசெய்ய முடியும். உதாரணமாக, உறுப்பினர்கள் தங்கள் பெயரின் எழுத்துப்பிழை, பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், பாலினம், திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா, கணவன் மற்றும் மனைவியின் பெயர் மற்றும் நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதி மற்றும் பிற தகவல்களை மாற்றலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதுப்பிப்பை யார் செய்ய முடியும்?
ஆதாருடன் UAN எண் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என EPFO தெரிவித்துள்ளது. முன்பு, இதை செய்ய, முதலாளி / நிறுவனத்தின் உதவி தேவைப்பட்டது. இதனால் இந்த மாற்றங்களை செய்ய அதிக நேரம் எடுத்தது. ஆனால், இந்த புதுப்பித்தலுகுப் பிறகு, இந்த மாற்றங்களை செய்வது மிகவும் எளிமையாகிவிடும். இதில் இனி எந்த வித பிரச்சனயோ அல்லது கால தாமதமோ இருக்காது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்
முதலில் EPFO சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் அட்டை PAN உடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால், முதலில் இரண்டையும் இணைக்க வேண்டியது மிக அவசியமாகும். 50 சதவீத தகவலைப் புதுப்பிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஒப்புதல் இன்னும் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், EPFO உறுப்பினர்கள் மீதமுள்ள புதுப்பிப்புகளை அவர்களே செய்யலாம். புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இது புகார்கள் நீண்ட காலத்திற்கு தீர்க்கப்படாமல் நீட்டிகப்படுவதைக் குறைக்கும்.
இதற்கான முழு செயல்முறையையும் இங்கே காணலாம்:
- முதலில் உறுப்பினர் EPFO வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் பிறகு தங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
- லாக் இன் செய்த பிறகு, மேலே 'மேனேஜ்' என்ர விருப்பத்தைக் காண்பீர்கள்.
- அதை கிளிக் செய்யவும்.
- உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க, 'மாடிஃபை பேசிக் டீடைல்ஸ்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி தகவல்களை நிரப்ப வேண்டும்.
- ஆதார் அட்டையிலும் EPFO-விலும் உள்ள அனைத்து விவரங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
- ஆதார் அட்டை அல்லது பான் அட்டை ஆதாரமாகக் கேட்கப்பட்டால், அதைப் பதிவேற்றவும்.
மேலும் படிக்க | PF விதிகளில் வந்த மிகபெரிய மாற்றம்.... வேலை மாற்றும்போது பணத்தையும் மாற்றலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ