Kudumbasthan Movie Review : கோலிவுட்டில், வளர்ந்து வரும் கதாநாயகனாகவும் முக்கிய கதாநாயகனாகவும் இருக்கிறார், மணிகண்டன். இவர் இதுவரை நடித்திருக்கும் சில்லுக்கருப்பட்டி, குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யதார்த்தமான கதாப்பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் இவர், சமீபத்தில் நடித்திருக்கும் படம், குடும்பஸ்தன். இந்த படம், ஜனவரி 24ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்தும், இது குறித்து ரசிகர்கள் பேசிக்கொள்வது குறித்தும் இங்கு பார்ப்போம்.
குடும்பஸ்தன் திரைப்படம்:
குடும்பஸ்தன் படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இதில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சான்வே மேக்னா நடித்திருக்கிறார். காமெடி-டிராமாவாக உருவாகியிருக்கும் குடும்பஸ்தன் படம், அனைத்து குடும்பஸ்தர்களாலும் கனெக்ட் செய்து கொள்ளக்கூடிய கதையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான தனியான ஸ்கிரீனிங், நேற்று நடந்தது. பிற ஊடகங்களிடம் இருந்து பாசிடிவான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் குறித்து நெட்டிசன்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
குடும்பமாக குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்..
Kudumbasthan -
குடும்பமாக குலுங்கி குலுங்கி சிரிக்க, சிந்திக்க வைக்கிறான் இந்த #Kudumbasthan
A tale of beautiful, long forgotten Pure Family Entertainment Movie with all sorts of emotion and lots of laughter! A Laughter Riot First Half with an Entertaining and… pic.twitter.com/uNnIJcPCIv
— Manoj Maddy (@edits_manoj) January 23, 2025
படம் பார்த்த ஒருவர் குடும்பஸ்தன் படம் அனைவரையும் குடும்பமாக குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதாக தெரிவிட்திருக்கிறார். மேலும், முதல் பாதி நகைச்சுவையாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மணிகண்டனின் நடிப்பிற்கும் நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. கூடவே குரு சோம சுந்தரத்தின் நகைச்சுவைக்கும் பாராட்டு கொடுத்திருக்கிறார், அந்த நெட்டிசன்.
எல்லாமே பிடிச்சிது..
Loved each & every moments in #Kudumbasthan
If feels like a personal victory
Congratulations Team Nakkalites @Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @VaisaghOfficial @Prasannaba80053 pic.twitter.com/vXodd0Ucbd
— Karthikeyan S (@SKarthikeyan77) January 23, 2025
படம் பார்த்த இன்னொருவர், தனக்கு படத்தில் இருந்த அனைத்துமே பிடித்திருந்ததாகவும், இது தனிப்பட்ட வெற்றி போல உணர செய்ததாகவும் பதிவிட்டிருக்கிறார்.
ஹாட்ரிக் வெற்றி:
படம் பார்த்த இன்னொருவர், இது மணிகண்டனுக்கு ஹாட்ரிக் வெற்றி என குறிப்பிட்டிருக்கிறார்.
#Kudumbasthan has a terrific first half, that’s so much loaded with one liners that land so well, and @Manikabali87 is fantastic in what is his hattrick success after Lover and Good Night
The world of Kudumbasthan and the writing feel like a strong of perfectly narrated sketch… pic.twitter.com/D3UOo5RIWf
— Anusha Sundar (@anusha16_) January 23, 2025
கதை, நல்ல காமெடியுடனும் நல்ல கதாப்பாத்திரங்களுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பிற படங்களுடன் ஒப்பீடு..
ஒருவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
On the lines of #VIP & #Thiruchitrambalam, this situational comedy-drama blends family emotions & humor seamlessly. High on laughs with heartfelt connect. Congrats team! #FamilyDrama #MustWatch"#kudumbastan @Nakkalites @Manikabali87
(@itsvinoo) January 24, 2025
காமெடி, அனைவருடனும் கனெக்ட் ஆவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
4.5/5:
படம் பார்த்த ஒருவர், குடும்பஸ்தன் படத்திற்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கிறார்.
#Kudumbasthan Movie My Rating 4.5/5
Semma Comedy Ah Irrukku Kandipa Theatre La Pakkuradhukku Worth Ana Movie
Neraiya Scene Namma Life La Connect Pannikka Mudiyum@Manikabali87 Anna Vera Level Acting Kandipa Periya Vetri Tharum Indha Movie #KudumbasthanReview pic.twitter.com/ZtkKugYBA4
— Bigg Boss Vignesh (@BiggBossVignesh) January 24, 2025
படம் காமெடியாக இருபப்தாகவும், தியேட்டரில் பார்க்க வர்த் ஆன படம் என்றும் தெரிவித்திருக்கிறார். நிறைய காட்சிகளை நம் வாழ்க்கையுடன் கனெக்ட் செய்ய முடிவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கொஞ்சம் டல்..
Few dull spots in the latter half of #Kudumbasthan, however it doesn’t affect the result of the movie much. Overall, a light-hearted entertainer where the emotional angle connects too#KudumbasthanReview - End of pic.twitter.com/xX0IGzB1lQ
— MovieCrow (@MovieCrow) January 23, 2025
ஒருவர், இந்த படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் டல்லாக செல்வதாகவும் ஆனால் அதை பிற காட்சிகள் சமாளித்து விடுவதாகவும் கூறியிருக்கிறார். இதனால் கண்டிப்பாக இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஒரே நாளில் தமிழில் வெளியாகும் 6 படங்கள்! முதலில் எதை பார்க்கலாம்?
மேலும் படிக்க | Kudumbasthan Trailer : ‘குடும்பஸ்தன்’ பட டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ