தளபதி 67 அப்டேட் வெளியாகும் தேதி இதுதான்; விக்ரம் பிரபலம் கொடுத்த சரவெடி அப்டேட்

தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற சரவெடி அப்டேட்டை தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கும் நரைன் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 02:19 PM IST
  • தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்
  • தீபாவளிக்கு காத்திருக்கும் சரவெடி
  • நரைன் கொடுத்த இனிப்பான செய்தி
தளபதி 67 அப்டேட் வெளியாகும் தேதி இதுதான்; விக்ரம் பிரபலம் கொடுத்த சரவெடி அப்டேட் title=

வாரிசு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தைக் காட்டிலும் அடுத்ததாக உருவாக இருக்கும் தளபதி 67 படம் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தளபதி 67 படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் என்றாலும், இது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எபோபது தளபதி 67 அப்டேட் கேட்டாலும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பார்கள், அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றே கூறி வருகிறார்.

'பொன்னியின் செல்வன் வலதுசாரி படம்' - ராஜராஜ சோழன் சர்ச்சையில் வான்டடாக வண்டியில் ஏறும் மோகன்.ஜி

இதை வைத்தே அவர் தான் தளபதி 67 படத்தை இயக்குகிறார் என ஏற்கனவே ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். அவரும் மறுப்பு தெரிவிக்காமல் சிரிப்பையே பதிலாக கொடுத்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் அவர் தளபதி 67 படத்திற்கான வேலைகளை முழுமூச்சாக செய்து வருகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார். விக்ரம் படம் போல் இந்த படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, நரைன், பகத்பாசில் உள்ளிட்டோரை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ்,தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர்களை களமிறக்க முடிவு செய்துள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த நரைன் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருக்கும் அவர், தளபதி 67 படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி அன்று தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் சரவெடி அப்டேட்டை இணையத்தில் கொளுத்தி போட்டுள்ளார். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி செல்லாதது ஏன்? விஜய் டிவி வைத்திருக்கும் சர்பிரைஸ் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News