“பிக்பாஸ் 8 டைட்டில் வின்னராக ‘இவருக்கு’ வாய்ப்பு இருக்கு..” எவிக்ட் ஆன ரவீந்திர் பேட்டி!

Bigg Boss 8 Tami Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக எவிக்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

Written by - Yuvashree | Last Updated : Oct 25, 2024, 12:58 PM IST
  • பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் கணிப்பு
  • ரவீந்தர் முதல் வாரத்தில் வெளியேறினார்
  • இதில் ஜெயிக்க யாருக்கு வாய்ப்புள்ளது?
“பிக்பாஸ் 8 டைட்டில் வின்னராக ‘இவருக்கு’ வாய்ப்பு இருக்கு..” எவிக்ட் ஆன ரவீந்திர் பேட்டி! title=

Bigg Boss 8 Tami Title Winner Prediction : தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து, முதல் வாரத்திலேயே வெளியேறிய போட்டியாளர், ரவீந்தர். இவர், தான் இதுவரை பார்த்தை வைத்து யார் பிக்பாஸ் 8 போட்டியை வெல்வார் என கணித்து சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

முதல் வாரத்திலேயே வெளியேறிய ரவீந்தர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளின்படி, ஒரு வாரத்திற்கு பிறகு, ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார். ஆனால், இந்த முறை புதுமுயற்சியாக போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள்ளேயே சாச்சனா வெளியேறினார். ஆனால், இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீண்டும் பிக்பாஸ் 8 இல்லத்திற்குள் நுழைந்தார். இந்த நிலையில், முதல் வார எவிக்ஷனில் இருந்து வெளியேறிவர் ரவீந்தர்.

திரைப்பட தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் பிபி 8 நிகழ்ச்சியின் முதல் மற்றும் முக்கிய போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், வாக்குகள் குறைவாக இருந்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, அவர் தொடர்ந்து பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு பிபி இல்லத்தில் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து கூறி வருகிறார். 

பலமான போட்டியாளர்..

பேட்டியில், பலமான போட்டியாளர் குறித்து பேசிய ரவீந்தர், தான் அந்த வீட்டில் கவனித்தது குறித்து பேசியிருக்கிறார். அந்த வகையில், வந்த நோக்கத்தை முனைப்போடு விளையாடும் போட்டியாளராக முத்துக்குமரனை கூறியிருக்கிறார். 

கோபத்தை கட்டுப்படுத்தும் போட்டியாளர்..

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை பொறுத்தவரை, அனைத்து இடங்களிலும் பொறுத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் போட்டியாளர்களின் உண்மையான முகத்தை ரசிகர்களுக்கு காண்பிப்பதற்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பலர் இந்த நிகழ்ச்சியில் கோபப்படக்கூடாது என பொறுத்து போவர். அப்படி, கோபத்தை அதிகம் கட்டுப்படுத்தும் போட்டியாளர் குறித்து ரவீந்தர் பேசியிருக்கிறார். ஆண்கள் அணியில் ரஞ்சித், அருண் ஆகியோரும் பெண்கள் அணியில் பவித்ராவும் கோபத்தை கட்டுப்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். 

Bigg Boss 8

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?

டைட்டில் வின்னார்-ஆக..

பிக்பாஸ்  8 நிகழ்ச்சியில் யார் டைட்டில் அடிக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ரவீந்தரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பெரும்பாலும் பெண்கள்தான் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக கூறினார். மேலும், முத்துக்குமரனின் கேம் அணுகுமுறையை பார்த்தால் அவர் ஜெயிக வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

சரியாக விளையாடி வருபவர்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, ஆரம்பத்தில் கொஞ்சம் கரடு முரடாகவே ஆரம்பித்தது. பலர், யாருக்கும் விளையாட தெரியவில்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தனர். ஆனால், போட்டியாளர்களுடன் 1 வாரம் கூடவே இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை 2வது சீசன் முதல் ரிவ்யூ செய்து வரும் ரவீந்தர் வேறு மாதிரியாக கூறுகிறார். பெண்கள் அணியில் தர்ஷிகா, ஜாக்குலின், சுனிதா, பவித்ரா ஆகிய நால்வரும் சரியாக விளையாடி வருவதாகவும், ஆண்கள் அணியில் விஷால், முத்துக்குமரன், தீபம் இவர்கள் மூவரும் சரியாக விளையாடி வருவதாகவும் கூறியிருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல, ரவீந்தரின் கணிப்பு பொய்க்கிறதா அல்லது ஜெயிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Bigg Boss 8 Tamil

முதலில் ரவீந்தர் வெளியேறியதை தொடர்ந்து, செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ் எவிக்ட் ஆனார். அப்போது அவர் மேடையில் பேசிய விஷயங்களுக்கு விஜய் சேதுபதி டென்ஷனானதும், அவரை மக்கள் விமர்சிக்க ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News