லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ஆக்சன் படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், ஆர்.மகேந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
ALSO READ | மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட சூர்யா கார்த்தி
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கமலின் பிறந்தநாளன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு பணிகள் சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு உடல்நிலை சரியானதை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபின், படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021
இந்நிலையில் 'விக்ரம்' படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் சம்மர் சீசனை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் 'விக்ரம்' படம் ரிலீசாகும் என்று இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், எடிட்டராக பிலோமின் ராஜ், கலை இயக்குனராக சதிஷ் மற்றும் நடன இயக்குனராக சாண்டியும் இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அஜித் - யுவன் என்றாலே வெற்றி கூட்டணி! ஏன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR