சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் வரும் 13ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 5 மொழிகளில் பான் - இந்தியா ரிலீசாக வெளியாகவுள்ளது. டிக்கெட் புக்கிங்குகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், இப்படத்தின் திரை விமர்சனம் என்ற பெயரில் இன்ஸ்டகிராம் பதிவொன்று இணையத்தில் வலம் வருகிறது.
‘ஓவர்சீஸ் சென்சார் போர்டு விமர்சனம்’ எனத் தலைப்பிட்டு வெளியாகியுள்ள அந்த பதிவில், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஸ்க்ரீனில் தோன்றும் ஒரு காட்சிகூட போர் அடிக்கவில்லை எனவும் காட்சிக்கு காட்சி ரசிகர்களை விஜய் கட்டிப்போட்டு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் விதமாக விஜய் இப்படத்தில் பிரமாதப்படுத்தியுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
திரைக்கதையைப் பொறுத்தவரை குறைகூற முடியாத அளவுக்கு ‘razor-sharp’ லெவலில் கனகச்சிதமாக உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக இப்படத்தில் விஜய்யின் நடிப்பு கைதட்டும் அளவுக்கு செமயாக உள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீஸ்ட் படம் குறித்த இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலர் இந்தப் பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பல்வேறு உலக நாடுகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 420க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அதேநேரம், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இப்படத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR