தலையை சுற்ற வைக்கும் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

Chiyaan Vikram Net Worth: நடிகர் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் விவரத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 10, 2024, 07:34 PM IST
  • 57 வயதிலும் செம்ம ஸ்டைலிஷ் விக்ரம்.
  • நடிகர் சியான் 62 படத்தின் அப்டேட்.
  • நடிகர் சீயான் விக்ரம் சொத்து மதிப்பு.
தலையை சுற்ற வைக்கும் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா? title=

நடிகர் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு விவரம்: திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சீயான் விக்ரம்:
தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் பிற ஹீரோக்களை விட இவர் தனித்து காணப்படுகிறார். பல்வேறு கஷ்டங்கள், மற்றும் வேதனைகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்தார். இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கினார். இதை தொடந்து, கடந்த 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார், அதன்பிறகு எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்தயார். 1997 ஆம் ஆண்டில், ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், கண்களின் வார்த்தைகள், ஹௌஸ்ஃபுல் போன்ற படங்களில் நடித்தார், இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை இவரால் பெற முடியவில்லை.

சேது மூலம் ஹிட்டான விக்ரம்:
இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் வெற்றி விக்ரமை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சேது படத்திற்கு பிறகு சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, தெய்வத் திருமகள் போன்ற ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தார். 

மேலும் படிக்க | வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.. என்ட்ரியாகும் மாஸ் நடிகர்.. வெற்றிமாறனின் அதிரடி

57 வயதிலும் செம்ம ஸ்டைலிஷ் விக்ரம்:
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், தற்போது கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் 62 படத்தின் அப்டேட்:
இதை தொடர்ந்து விக்ரம் தற்போது தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். சித்தா படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அத்துடன் எஸ்.ஜே.சூர்யா அவருடைய திரைப் பயணத்தில் இதுவரை பார்த்திராத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

நடிகர் சீயான் விக்ரம் சொத்து மதிப்பு:
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் படி நடிகர் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு ரூ. 240 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறுகின்றனர். சீயான் விக்ரம் பயன்படுத்தும் கார்கள், Porsche 911 Turbo - ரூ. 3.8 கோடி, Audi Q7 - ரூ. 80 லட்சம், Toyota Land Cruiser Prado - ரூ. 86 லட்சம், Audi A4 - ரூ. 46 லட்சம், Audi R8 - ரூ. 2.70 கோடி ஆகும். 

மேலும் படிக்க | சீயான் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் எஸ்ஜே சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News