வைபவ் நடித்துள்ள பபூன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள பபூன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 23, 2022, 07:14 PM IST
  • பபூன் படம் இன்று வெளியாகி உள்ளது.
  • வைபவ், அநேக போன்றோர் நடித்துள்ளனர்.
  • சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
வைபவ் நடித்துள்ள பபூன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்! title=

நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வைபவ். அவரது நடிப்பில் இந்த வாரம் பபூன் திரைப்படம் வெளியாகி உள்ளது, அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் கார்த்திக் சுப்புராஜுடன் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.  பபூன் படத்தில் அனகா, ஆத்தங்குடி இளையராஜா, நரேன், தமிழ், கனகராஜ், ஜோ ஜார்ஜ் என கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் இந்த படத்திலும் நடித்துள்ளனர். காரைக்குடி பகுதியில் பபூன் வேடமிட்டு வைபவ் மற்றும் இளையராஜா வாழ்த்து வருகின்றனர்.  தற்போது உள்ள சூழ்நிலையில் நாடகங்களுக்கு மவுசு குறைந்து வருவதால், வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர்.  அதற்கான பண தேவைகளுக்காக ஒரு கடத்தல் கும்பலிடம் தெரியாமல் வேலைக்கு சேருகின்றனர்.  அப்போது போலீசில் பிடிபட, அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.  இறுதியில் என்ன ஆனது என்பதே பபூன் படத்தின் ஒன்லைன்.  

ba

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 எப்போது?... மணிரத்னம் பதில்

ஹீரோ வைபவ் தனக்கே உரிய எதார்த்தமான நடிப்பில் அசத்தியுள்ளார். எந்தவித அலட்டலும் இல்லாமல் இந்த கதைக்கேத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே ஆத்தங்குடி இளையராஜா பல இடங்களில் கைத்தட்டுகளை பெறுகிறார் ,அவரது ஒன்லைன் காமெடி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் அனகா இலங்கை அகதியாக நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  படம் ஆரம்பித்ததில் இருந்து கதையினுள் நம்மளை கொண்டு செல்கிறது, எந்தவித தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் நேரடியாக கதையினுள் மட்டுமே முழு படமும் நகர்கிறது. கொஞ்சம் மிஸ் ஆனாலும் புரியாமல் போய்விடும் இந்த கதையை அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் சிறப்பாகவே எடுத்துள்ளார். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக உள்ளது.  

bu

வழக்கமாக கார்த்திக் சுப்புராஜ் கதையில் வரும் இலங்கை அகதி கதையும் ஆங்காங்கே எட்டி பார்க்கிறது.  நரேன் தனது வழக்கமான வில்லத்தனத்தில் கலக்கி உள்ளார்.  ஜெய்பீம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் தமிழ் அசத்தி உள்ளார்.  சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையில், எப்படி தன்னை காப்பாத்தி கொள்கிறான் என்பதை சிறப்பான காட்சி அமைப்பின் மூலம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது.  இந்த அரசியல் கலந்த திரில்லரில் பல உண்மை சம்பவங்களையும் ஆங்காங்கே தெளித்துவிட்டு செல்கிறார் இயக்குனர்.  ஒரு நல்ல பொலிடிகல், போலீஸ் இன்வெஸ்டிகேசன், காங்ஸ்டர் கதையாக பபூன் உள்ளது.

மேலும் படிக்க | கருணாஸ் நடித்துள்ள ஆதார் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News