Ajith Kumar met a car accident again: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் மட்டுமின்று கார் ரேஸிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் கடந்த மாதம் பங்கேற்றார்.
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்
சர்வதேச அளவிலான இந்த போட்டியில் அவர் மூன்றாவது இடம் பிடித்தார். இதனை இந்திய மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடினார். இப்போட்டிக்கு முன்பாக பயிற்சியின் போது அஜித் குமாரின் கார் விபத்தியில் சிக்கியது. அதன் பிறகு தான் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்று உள்ளார். இப்போட்டிக்கான பயிற்சியின் போது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். காயம் ஏதும் ஏற்படவில்லை. அவரை பத்திரமாக மீட்ட நிலையில், கார் மட்டும் சேதம் அடைந்துள்ளது.
மேலும் படிங்க: விடுமுறையிலும் குறைந்த வசூலை பெற்ற விடாமுயற்சி!! 3 நாள் கலக்ஷன் இவ்வளவு தானா?
நல்ல நேரமாக உள்ளது
இந்த நிலையில், அஜித் குமார் விபத்து குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் பேசிய அவர், எங்களுக்கும் மீண்டும் நல்ல நேரம் இருக்கிறது. சிறிய அளவிலான விபத்தில் சிக்கினோம். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கார் ரேஸில் வெற்றி பெற்று பெருமையை நிலைநாட்டுவோம். விபத்து நடைபெற்ற நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நன்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்றோம் எனத் தெரிவித்தார்.
அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 06ஆம் தேதி வெளியானது. இயக்குநனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அஜித் குமார் படம் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில், இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு அவரது ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அடுத்ததாக அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: கிளாமர் காட்டும் 'கங்குவா' பட நடிகை.. திசா பதானியின் வைரல் போட்டோஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ