காதல் உறவில் அதிகம் நேசிப்பது ஆண்களா? பெண்களா? பதில் இதோ!

Who Loves The Most In Love Relationship : காதல் உறவில் அதிகம் நேசிப்பது ஆண்களா? பெண்களா? பதிலை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Who Loves The Most In Love Relationship : பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் வரப்போகிறது. இந்த நாளை, காதலித்துக்கொண்டிருப்பவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக செலவு செய்வர். சிங்கிளாக இருப்பவர்கள், தங்களின் அன்புக்குரியவர் வருவதற்காக காத்திருப்பர் அல்லது தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த நாளை கொண்டாடுவர். இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த காதல் உறவு என்று வந்துவிட்டால், அதில் அதிகம் நேசிப்பவர் யார்? ஆணா? பெண்ணா? இது குறித்த தகவலை இங்கு பார்ப்போம். 

1 /7

காதல் என்பது, அதிகம் யார் காதலிக்கின்றனர் என்பதில் அடங்காது. ஆண்கள், ஒரு வகையில் தங்களின் காதலை வெளிப்படுத்தினால் பெண்கள் ஒரு வகையில் காதலை வெளிப்படுத்துவர். இருப்பினும் ஒரு காதல் உறவு என வந்துவிட்டால், ஆண்களை விட பெண்கள் அதிகமாக காதலிப்பதாக கூறப்படுகிறது. அதற்கான சில காரணங்களும் இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.

2 /7

பெண்கள், எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக எடுத்துக்கொள்வர். இதனால், உறவில் இருக்கும் போது கூட அவர்கள் இதே போன்ற உணர்வுகளுடன் தொடருவர்.

3 /7

பெரும்பாலான பெண்கள் பிரதிபலனை எதிபார்க்காமல் அளவற்ற காதலை காட்டுவர். காதல் உறவில், எதிரில் இருக்கும் நபர் தன்னை அதிகமாக காதலிக்கவில்லை என்றாலும், அவருக்கும் சேர்த்து இவர்களே காதலிப்பர்.

4 /7

பெண்களுக்கு பொதுவாகவே பொறுமை என்பது அதிகமாக இருக்கும். தன்னுடன் உறவில் இருக்கும் ஆண் ஏதேனும் தவறிழைத்தால் கூட, அதை மன்னித்து அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது இவர்களின் இயல்பாக இருக்கிறது.

5 /7

பெண்கள், காதலில் இருக்கும் போது தங்களின் உணர்ச்சிகலையும் காதலையும் எந்த விதமான தடையையும் தங்களுக்குள் விதித்துக்கொள்ளாமல் தெரிவிப்பர். இதை, பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை.

6 /7

பெண்கள், தனக்கு பிடித்த ஒரு விஷயம் என்றாலும் கூட அதை தனக்கு பிடித்தவர்களுக்காக விட்டுக்கொடுப்பர். காதல் உறவிலும் அப்படித்தான், தன் வாழ்வில் தன்னை முதன்மை படுத்துவதை விட காதலிக்கும் நபரையே முதன்மை படுத்துவர். 

7 /7

பெண்கள், தங்களின் காதல் உறவு தொடங்கிய புதிதில் எப்படி இருக்கிறார்களோ கடைசி வரை அப்படியே இருப்பார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இப்படி செய்வதில்லை.