அன்லிமிட்டட் பானிபூரி ஆஃபர்! கடைக்காரரின் வித்தியாசமான முயற்சி..வைரல் செய்தி!

Unlimited Panipuri For Lifetime Offer : ஒரு பானிபூரி கடைக்காரர், அன்லிமிட்டட் பானிபூரி விற்கும் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2025, 03:56 PM IST
  • அன்லிமிட்டட் பானிபூரி ஆஃபர்!
  • வித்தியாசமாக வியாபாரத்தை பெருக்கும் கடைக்காரர்..
  • வைரல் செய்தி..
அன்லிமிட்டட் பானிபூரி ஆஃபர்! கடைக்காரரின் வித்தியாசமான முயற்சி..வைரல் செய்தி! title=

Unlimited Panipuri For Lifetime Offer : இந்தியாவின் பிரபலமான சாட் ஐட்டங்களில் ஒன்றாக இருக்கிறது பானி பூரி. இதனை ஒரு கடைக்காரர் அன்லிமிடெட் ஆக விற்று வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவின் அனைத்து விசேஷங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு உணவு பொருளாகிவிட்டது பானி பூரி. திருமண வீடுகள், காதுகுத்துகள், பெயர் சூட்டு விழா என இந்த பானி பூரி ஸ்டால் இல்லாத இடமே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை ஏதேனும் ஒரு மெயின் ரோட்டில் நான்கு கடைகளில் ஒரு கடையாக பணிபுரி கடை இருக்கும். ஆனால் இப்போது நகரங்களைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களையும் தொட்டுவிட்டது இந்த பானிபூரி. இதனை இந்தியில் கோல்காப்பா என்று அழைக்கின்றனர்.

வட இந்திய உணவுகள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாவது வழக்கம்தான். அவற்றின் சுவையை தாண்டி அது எப்படி தான் இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என சிலர் ஆர்வம் கொள்வதே இதற்கு காரணமாகியுள்ளது. இந்தப் பானிபூரி மோகம் ஏற்று போயிருக்கும் தருவாயில், இதை பயன்படுத்திக் கொண்ட ஒரு கடைக்காரர் இதை வைத்து தனது வியாபாரத்தையும் பெருக்கிக் கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு அன்லிமிடெட் பானிபூரி..

நாக்பூரில் இருக்கும் ஒரு பானிபூரி கடைக்காரர் இந்த துரித உணவின் பெரியவர்களுக்காகவே வித்தியாசமான ஆஃபர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த சலுகை படி, ஒருவர் இந்த பானி பூரி கடையில் ரூ.99,000 செலுத்தினால் வாழ்நாள் முழுக்க அவர் காசே தராமல் அந்த கடையில் பானி பூரி சாப்பிட்டுக் கொள்ளலாம். அதுவும் எத்தனை பாணி பூரி வேண்டும் ஆனாலும் எப்போதும் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இணையவாசிகளின் கருத்து..

எந்த சமூக வலைதள பல பதிவு வெளியானாலும் அதற்கென்று ரியாக் செய்வதற்காக பல நெட்டிசன்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த நாக்பூர் பாணி பூரி வியாபாரியின் போஸ்டையும் பார்த்திருக்கின்றனர். ஒரு சிலர் அதை லைக் மட்டும் செய்துவிட்டு கிளம்ப, இன்னும் சிலர் கமெண்ட் செக்ஷனை தங்களின் கருத்தை தெரிவித்து இருக்கின்றேனர்.

ஒரு சிலர் இது எனது வாழ்க்கைக்கான காசா அல்லது நான் சாப்பிடும் பானி பூரிக்காண காசா? என்று கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர், இந்த கடைக்கார நியாயமாக இருப்பாரா என்று கேட்டு வருகின்றனர். ஒரு மனிதர் தன் வாழ்நாளில் ஒரு லட்சம் அளவு இருக்கா பானி பூரி சாப்பிடுவார்? என்ற கேள்வியும் நிலவி வருகிறது. இதனால் இப்படிப்பட்ட தொகைக்கு சப்ஸ்கிரைப் செய்பவர்கள், கடைசியில் பணத்தை இழந்து ஆரோக்கியத்தை இழந்து நடுத்தெருவில் தான் இருக்க வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பானிபூரி பிரியர்கள் கவனத்திற்கு! புற்றுநோய் ஏற்படும் ரசாயனங்கள் உள்ளது!

மேலும் படிக்க | பானிபூரி சாப்பிடவே இனி யோசிப்பீர்கள்... இப்படியா மாவு பிசைவீங்க - ஷாக் வைரல் வீடியோ!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News