ஒரே வரியில் கொளுத்திப்போட்ட அஜித்… விஜய்யை சீண்டியது ஏன்? கொதிக்கும் தவெக-வினர்!

அஜித் தற்போது துபாயிலுள்ள மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீடியாவில் அவர் பேட்டி அளித்துள்ளது வைரலாகி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2025, 12:02 PM IST
  • துபாய் ரேஸில் அஜித்.
  • 3வது இடத்தை பிடித்துள்ளார்.
  • பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரே வரியில் கொளுத்திப்போட்ட அஜித்… விஜய்யை சீண்டியது ஏன்? கொதிக்கும் தவெக-வினர்!  title=

நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். அங்கு அவர் பேசும் சில விஷயங்கள் கடும் வைரலாகி வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என அஜித் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் ரேஸிங் டீம் முன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது. இதை அடுத்து ரஜினிகாந்த், உதயநிதிக்கு ஸ்டாலின், டி ஆர் பி ராஜா என பலரும் அஜித்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..

இந்த சூழலில் அஜித் தற்போது துபாயிலுள்ள மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீடியாவில் அவர் பேட்டி அளித்துள்ளது வைரலாகி வருகிறது. அதில், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். ரசிகர்களே படத்தை படமாக பாருங்கள்.`அஜித் வாழ்க விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என பேசியிருக்கிறார்.

இந்த பேட்டியை அடுத்து பலரும் அஜித் பேசியதை கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் விஜய் ரசிகர்கள் சற்று அப்செட் ஆகியுள்ளனர். அதற்கு காரணம் அஜித் பேசும் போது, விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று கூறுகிறீர்கள் ஆனால் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என்று சொல்லியது தான். விஜய் தனது ரசிகர்களை நம்பி சினிமாவை விட்டு விலகி கட்சி தொடங்கி இருக்கும் இந்த வேளையில், ரசிகர்களை trigger செய்யும் வகையில் அஜித் இப்படி பேசி இருப்பதாக விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சினிமாவை விட்டு விலகிய விஜய் குறித்து துபாயில் அஜித் பேச வேண்டிய அவசியம் என்ன என்றும், அஜித் இப்படி பேசுவது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

துணை முதலமைச்சர், அமைச்சர் என பலரும் அஜித்தை கொண்டாடி சமீப காலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2026 தேர்தல் களத்தில் அஜித் ரசிகர்களின் வாக்கு யாருக்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் இப்போதெல்லாம் அஜித் படங்களின் டீசரை புகழ்ந்து ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் வாக்கு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே அஜித்தின் இந்த பேட்டியும், அவருக்கு துணை முதலமைச்சர் தெரிவித்த வாழ்த்தும் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அரசியல் உள்நோக்கம் இதில் இருப்பது தெரிவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் புலம்பு வருகின்றனர். அஜித்தின் பேச்சு விஜய்க்கு சிக்கல் ஏற்படுத்துமா?? இல்லை இதில் அரசியல் இல்லையா என்பதெல்லாம் போகக்போக தெரியும்.

மேலும் படிக்க | ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News